பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 சத்திய வெள்ளம்

கம்பங்களியை ஒரு கை பார்த்ததும் சுகமாகத் தூக்கம் வந்தது. அய்யாவுவிடம் சொல்லிவிட்டுத் திண்ணையில் போய்ப் படுத்த பாண்டியன் மறுபடியும் கண் விழித்த போது பகல் இரண்டு மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு மணவாளனின் வீட்டில் பேசியே கழித்து விட்டதால் நல்ல உறக்கமில்லாமல் சோர்ந்திருந்த அவனை பஸ் பயணம் வேறு களைப்படையச் செய்திருந்ததால் அடித்துப் போட்ட மாதிரித் தூங்கியிருந்தான். அவன் விழித்தபோது கோணிப் பைகளோடு மிளகாய்த் தோட்டத் துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அய்யாவு. குளித்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு தானும் அங்கே வருவதாக அவனிடம் சொல்லி அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்குச் சென்றான் பாண்டியன்.

சில மாதங்களாக ஹாஸ்டல் பாத்ரூமில் ஒரு வாளி வெந்நீரில் குளித்துப் பழகிவிட்டுத் திடீரென்று வாளியால் கிணற்றிலிருந்து தண்ணிர் இறைத்துக் குளிப்பது சிரமமா கவும் அசெளகரியமாகவும் இருப்பதுபோல் பட்டது. இறவைக் கயிறு கைகளில் அறுப்பதுபோல் உறுத்தியது. அரையில் சின்னஞ்சிறு துண்டுடன் அவன் குளித்துக் கொண்டிருக்கும்போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி குடத்தோடு தண்ணிருக்கு வந்தாள். ஊரிலிருந்து இரண் டரை மைல் தள்ளி இருக்கிற பருத்திக் காட்டுக்குத் தனியே போய்ப் பருத்தி எடுத்துக் கொண்டு இருட்டியபின் வீடு திரும்புகிற அளவு தைரியமுள்ள அவள் தான் குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கூச்சத்தோடு பயந்து தயங்கித் திரும்ப முயலுவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“ஏ, கருப்பாயி. ஏன் திரும்பறே? வந்து தண்ணி எடுத்துக்கிட்டுப் போ...”

அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, “குளியுங்க. பெறவு வந்து தண்ணி எடுத்துக்கிடுதேன்” என்று கூறிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்தபோது அவளை அவனால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. சாதாரணமாக