பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 271

அவனை இயல்பான அறிமுகமான இடத்தில் இருக்கும் சுபாவமான உணர்வுகளைக் கொள்ளச் செய்தன. உலகின் நாகரிக வேகங்களையும் ஃபாஷன்களையும் பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாமல் மண்ணை நம்பி உழுது பயிரிட்டுக் களை எடுத்து அமைதியாகவும், பேராசைப்படாமலும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்ப்பது மனத்துக்குத் தெம்பளித்தது. மூவாயிரம் ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்கும் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத் துணைவேந்தரைவிட அரைப்படி கேழ்வரகுக்காகவோ, முக்கால்படி சோளத்துக்காகவோ காட்டில் வெயிலில் வேலை செய்யும் இந்த விவசாயக் குடிமக்கள் நாணயமானவர்களாக இருக்க முடியும் என்று தெரிந்தது. ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் இல்லாத படித்தவர்களைவிடப் படிப்பில்லாமல் ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் உள்ள பாமரர்களே சமூகத்தைப் பலப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள் போலிருந்தது. மல்லை இராவணசாமியைப்போல் உழைக்காமல் பிறரைச் சுரண்டிக் கொழுக்கிறவர்கள் இந்தக் கரிசல் காட்டில் இல்லை. பண்புச் செழியனையும், பொழில் வளவனாரையும் போல் மற்றவர்களுக்கு வெறும் மொழி, இன வெறிகளை ஏற்றி அதில் தாங்கள் குளிர்காய வசதி செய்து கொள்ளும் தளுக்குப் பேர்வழிகளும் இந்தக் கரிசல் காட்டு உழைப்பாளிகளில் இருக்க வழியில்லை. விரிவுரையாளர் மதனகோபாலைப் போல் பிற பெண்களைக் குழுகுக் கண்களோடு வட்ட மிடும் சமூகக் கயவர்களை இங்கே காண முடியாது. இது கிராமம். எல்லாரும், எல்லாரையும் அறிந்து கொண்டு எல்லாருக்கும் உதவும் நெருக்கமானதோர் எல்லையில் யாரும் யாரையும் ஏமாற்றி வளர வாய்ப்பில்லை என்பது போல் கண்ணுக்கெட்டிய தூரம் பரவிக்கிடந்த அந்தக் கரிசல் காட்டில் ஆட்கள் நெருங்கி நின்று உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் தங்களுக்குச் சொந்தமான மிளகாய்த் தோட் டத்துக் கிணற்றடிக்குப் போய்ச் சேர்ந்தபோது பகல் கழிந்து