பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சத்திய வெள்ளம்

வீட்டுச் சன்னாசித் தேவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, “படிக்கிறதைவிட முக்காவாசி நாளு நீங்கள்ளாம் ஜெயிலிலே இருக்கீங்கன்னு தேவரு பேப்பைரப் படிச் சிட்டுச் சொல்றாரே; அது மெய்தானா?” என்று அவனைக் கேட்டார் தந்தை.

“நாங்க எந்தத் தப்பும் பண்ணி, அதுக்காக ஜெயிலுக் குப் போகலை. பண்ணாத தப்புக்காக அவங்களா எங் களை ஜெயில்லே அநியாயமா அடைச்சாங்க” என்றான் பாண்டியன். அரசியல் ரீதியாக அவன் போக்குப் பிடிக் காத காரணத்தால் சன்னாசித் தேவர் தந்தையிடம் இல் லாததும் பொல்லாததுமாகக் கோள் சொல்லி வைத்தி ருப்பார் போலிருந்தது. அது புரிந்திருந்தும் பாண்டியன் சன்னாசித் தேவரோடு அதிகமாக விவாதிக்க விரும்ப வில்லை. ஊரில் இருந்தபோது மதுரையிலிருந்தும், மல்லி கைப் பந்தலிலிருந்தும் அவனுக்குச் சில கடிதங்கள் வந்தி ருந்தன. பல்கலைக் கழகத்தைத் திறக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருந்தான். தான் கொடுத்திருந்த நவநீத கவியின் வசன கவிதைகளை அவன் படித்தாயிற்றா இல்லையா என்று விசாரித்துக் கண்ணுக்கினியாள் எழுதியிருந்தாள். திரும்பவும் மல்லிகைப்பந்தல் போவதற்கு முன் மதுரையில் இறங்கித் தம்மைப் பார்த்துவிட்டுப் போகுமாறு மன வாளன் எழுதிய கடிதத்தில் அவனை வேண்டியிருந்தார். அண்ணாச்சி சுகம் விசாரித்து ஒரு கார்டு போட்டிருந்தார்.

விடுமுறை அநேகமாக முடிந்துவிட்டது. சில நாட்கள் தங்கியதிலேயே சில மாதங்கள் கழித்து விட்டாற்போன்ற மனநிலையை அடைந்திருந்தான் அவன். புறப்படுவதற்கு முந்திய தினம் மாலையில் உலாவச் செல்லும் போது நவநீத கவியின் அந்த வசன கவிதைத் தொகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றிருந்த அவன் மிள காய்த் தோட்டத்துக் கிணற்றடி வேப்ப மரத்தின் கீழே அமர்ந்து அதைப் படிக்கத் தொடங்கினான். கிராமத்துக்கு வருகிற சமயங்களில் எப்போதுமே வீட்டில் அமர்ந்து