பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 279

“நாங்க அசந்து போறோமோ இல்லியோ நீ அசராமச் சொல்லிப் பாரு, அப்புறம் தெரியும்?” என்றான் பாண்டியன். அழகமுத்து தன் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

“பருவப் பாவைதான் உருவக் கோவையில் திருகித் திருகிச் செருகினாள் மனதைச் செருகிய மனத்தை தருவதோ தவிர்வதோ அறிகிலன் யானுமே உருகினன் பருகினன்.” ஒரு தமிழ் எம்.ஏ. மாணவன் இதைச் செவிமடுத்த உடனே ஆத்திரமாகக் கேட்டான்:

“சும்மா அளக்காதே அப்பனே! முருகிற் சிவந்த கழுநீரும்"னு ஆரம்பமாகிற பழைய கலிங்கத்துப் பரணிப் பாட்டை இமிடேட் பண்ணி அதிலே பருவப் பாவை’ உருவக் கோவை என்று உன் கண்டுபிடிப்பையும் நுழைச்சு எழுதியிருக்கே? இதிலே என்ன புதுசா இருக்கு?”

“புதுசா என்ன இருக்கணும்? அதான் வரிக்கு வரி எதுகை மோனை எல்லாம் இருக்கே...”

“அதெல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? கவிதை யல்லவா முக்கியமா அதுக்குள்ளார இருக்கணும்? அது இல்லியே?”

“நம்ம அழகுமுத்துவுக்கும் வேறு சில ஆட்களுக்கும் இந்தப் பருவப் பாவை'ங்கிற தொடரையே டெலிகிராபிக் அட்ரஸா - (தந்தி விலாசம்) கொடுத்திடலாம். சில பேருங்க கையிலே ரொம்ப வருசமா இந்தப் பருவப் பாவை சிக்கிக்கிட்டுப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கா...” “இத்தினி வருசத்துக்குப் பெறகும் அந்தப் பருவப் பாவை கிழவியாகாமே எப்பிடி ஒரே மாதிரி இன்னும் ‘பருவப் பாவையாகவே இருந்துக் கிட்டிருக்கான்னுதான் புரியலே...” -