பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சத்திய வெள்ளம்

“அதைப் பேசினவங்க, எழுதினவங்க எல்லாம் வயசாகிக் கிழவனாகி மூத்துப் போனப்புறமும் அந்த வார்த்தை இன்னும் அப்படியேதான் இருக்கு! வேடிக்கை தான்.”

இதைக் கேட்டு அழகமுத்து கோபித்துக் கொண்டு எழுந் திருந்து போய்விட்டான். எல்லா மாணவர்களும் சேர்ந்து கொண்டு தன்னைக் கிண்டல் செய்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விவாதம் நடந்த மறுநாள் காலை பாண்டியன் கிராமத்திலிருந்து பல்கலைக் கழகத்துக் குப் புறப்பட வேண்டியிருந்தது. இம்முறை அருப்புக்கோட்டை பஸ்ஸில் போய் மாறிப் போகாமல், விருதுநகர் சென்று மதுரைக்கு இரயில் மூலம் போக நினைத்தான் அவன். அடுத்த விடுமுறைக்கு இவ்வளவு நாட்களை வீணாக்காமல் முன்கூட்டியே புறப்பட்டு வந்து விடவேண்டும் என்று அவன் தாயும் தங்கையும் வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார்கள். அவன் புறப்படும்போது தந்தை எங்கோ காட்டுக்குப் போயி ருந்தார். அவருக்கு எப்போதும் வெள்ளாமை வேலைதான். பாசம், பிரியம் எல்லாமே இல்லாத முரட்டு மனிதர் போலத் தோன்றினாலும் பாண்டியனிடம் அந்தரங்கமான பாசமும் பிரியமும் அவருக்கு உண்டு. மேற்படிப்புக்கு வெளியூர் போன பின் எந்த விடுமுறைக்கு ஊர் வந்து திரும்பும் எந்தத் தடவை யிலும் அவன் புறப்படுகிற தினத்தன்று அவர் வீட்டில் இருந்து வழியனுப்ப நேர்ந்ததே இல்லை. “ஐயா கிட்டச் சொல்லிடு ஆத்தா” என்று அவருக்குமாகச் சேர்த்துத் தாயிடம் சொல்லிக் கொண்டு புறப்படுவதுதான் எப்போதும் அவன் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அன்று பிற்பகல் விருதுநகருக்குப் பஸ்ஸில் போகும் போது அதே பஸ்ஸில் அழகமுத்துவும் வருவதைப் பாதி துரம் சென்ற பின்பே பாண்டியன் பார்த்தான். அழகமுத்து முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பேசாமல் இருந் தான். அபிப்பிராய பேதத்தைக் கோபமாக மாற்றி விரோத மாக ஆக்கிக் கொள்கிற அளவு அவன் இன்னும் சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது பாண்டியனுக்குப் புரிந்தது.