பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 283

“என்னவோ தம்பி, எனக்கு உங்கள் போக்கெல்லாம் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தருக்குக் கட்டுப்படாத மாணவர்கள்கூடத் தமிழத்துறைத் தலைவருக்குக் கட்டுப்படுவார்கள். இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது.”

“நாங்களாக மாறவில்லை. நீங்கள்தான் எங்களை அப்படி மாற்றியிருக்கிறீர்கள் ஐயா!” - அவன் இவ்வாறு சுடச்சுட மறுமொழி கூறியதும் அவர் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டார். பெரிய வணக்கமாகப் போட்டுவிட்டு அவர்களைக் கடந்து மேலே நடந்தான் பாண்டியன்.

அவன் போய்ச் சேர்ந்தபோது வீட்டு வாயிலில் பூக்காரியிடம் பூ வாங்கிக் கொண்டிருந்தாள் கண்ணுக் கினியாள். பிச்சிப்பூ வாசனை கம்மென்று வந்து நாசியை நிறைத்தது. அவனைப் பார்த்ததும் அவள் வியப்போடு கேட்டாள்:

“அடடே. ஏது இப்படித் திடீர்னு. ஒருநாள் முன்னாடியே வந்திருக்கீங்க?. நாளன்னிக்குக் காலையிலே தானே யூனிவர்ஸிடி திறக்கிறாங்க?”

“ஒருநாள் முன்னாலேயே வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருக்கிறான். நான் நாளைக்குக் காலையிலேயே போறேன்.” -

“வாங்க... உட்காருங்க. அம்மா, நாயினா ரெண்டு பேருமே இல்லே. வெளியிலே போயிருக்காங்க. ஆடி வீதியிலே வாரியாரு கதை கேட்கப் போறோம்னு போனாங்க..” -

“வாரியாருக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன்.” “அப்படியானா உங்களை உள்ளார விடக் கூடாது.” “பின்னே எப்படியானா உள்ளேவிடச் சம்மதிப் பேன்னு தெரிஞ்சா நல்லது.”

“வர்ரீங்களா, நாமும் வாரியார் கதைக்குப் போகலாம்?"