பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 சத்திய வெள்ளம்

“நான் வரலை. எட்டரைமணிக்கு நான் மணவாளன் வீட்டுக்குப் புறப்பட்டாகணும். ஒன்பது மணிக்கு அவரை வீட்டில் வந்து பார்க் கறதாச் சொல்லியிருக்கேன். காத்திருப்பாரு.”

“சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். நான் ஒண்ணும் கதைக்குப் போகப் போறதில்லே...”

அவளையே இமையாமல் பார்த்தான் பாண்டியன். வாயிற்புரம் திரும்பிப் பார்த்து யாரும் வரவில்லை என்று உறுதியாகத் தெரிந்தபின் அவள் கையிலிருந்து பூவைப் பறித்துத் தானே அவள் கூந்தலில் சூட்ட முயன்றான் அவன். பூவை அவன் கைகளில் பறிகொடுத்து விட்டாலும் தான் அவன் பிடியில் சிக்காமல் சிரித்துக் கொண்டே உட்புறம் ஒடினாள் அவள். அவனும் விடவில்லை. அவன் துரத்த, அவள் ஒட, அந்த வீட்டின் உட்கூடத்தில் ஒரு சரஸமான ஒட்டப் பந்தயமே நடந்தது. முடிவில் கதவோர மாக அவளைப் பிடித்து நிறுத்திக் கதம்பமான இங்கித நறுமணங்கள் நிறைந்த அவள் கூந்தலை நாசியில் நுகர்ந்தபடி அந்தப் பூவைச் சூட்டினான் பாண்டியன்.

“திருப்திதானே! அகநானுற்றுக் காலத்துக் காதலன் போல் பூச்சூட்டியாச்சு. இல்லையா?.”

“இந்தக் காலத்துக் காதலன் மாதிரீன்னா எப்படி நடந்துக்கணும்? எனக்குத் தெரியாது. அதை நீதான் கொஞ்சம் சொல்லேன்.” --

“தமிழ் வாரப் பத்திரிகைகளிலே தொடர் கதை படியுங்க, புரியும். இல்லாட்டி ரெண்டு தமிழ் சினிமா வாவது பார்த்திட்டு வாங்க...” - அவள் சிரித்தாள். குரலில் கேலி நிறைந்திருந்தது.

“அப்பிடியா சேதி? புரியுது” என்று அவளைத் தாவிப் பிடிக்க முயன்றான் அவன்.

“இதிலேருந்து தமிழ்த் தொடர் கதைகளிலேயுேம் சினிமாவிலேயும் தாவறதும், பாயறதும்தான் இருக்குன்னு நிரூபிக்கிறீங்களாக்கும்."