பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 285

“மன்னிக்கணும்! நான் நியூவேவ் கதைகள் படிக்கிற தில்லை.”

“அப்படின்னா உட்காருங்க! ஒரு கதையும் படிக்க வேணாம்! அந்த நவநீத கவியின் கவிதைத் தொகுதி படிச்சீங்களா, இல்லையா?”

அவன் அந்தத் தொகுதியைப் படித்ததையும், அதி லிருந்த இளம் நம்பிக்கைகள் என்ற கவிதையைப் புகழ்ந்து வியந்ததனால் கிராமத்தில் ஒரு மாணவனுக்கும் தனக்கும் வந்த விரோதத்தையும் அவளிடம் விவரித்தான்.

“அந்தக் கவிதையில் உள்ள தொனி நயமும் காலத் தன்மையும் இணையற்றவை. அவரைத் தவிர வேறு யாருக்கும் அப்படி எழுத வராது” என்றாள் அவள்.

“ நட்சத்திரங்களும் முழு நிலாவும்'தான் அந்தத் தொகுதியிலேயே உனக்குப் பிடிச்சக் கவிதையின்னு நீ எனக்கு எழுதின கடிதத்திலே சொல்லியிருந்தே, இல்லியா?” “அதுக்குக் காரணம் உங்களுக்கும் அது பிடிக்கனும் கிறதுதான்! நட்சத்திரமும் முழு நிலாவும் எனக்குப் பிடிச்சா உங்களுக்குப் பிடிக்காமப் போயிடுமா என்ன?” “இப்பக்கூட வானத்திலே நட்சத்திரங்களும் சின்னப் பிறை நிலாவும் இருக்கு. வா மாடிக்குப் போகலாம்.”

“நீங்க ரொம்பத் தைரியக்காரர்தான்.” “யூனிவர்ஸிடி எலெக்ஷன் அப்ப ஒத்துக்காததை இப்பவாவது ஒத்துகிறியே? அப்பிடி வா வழிக்கு.”

வாயிற்புறம் யாரோ நடந்து வருகிற செருப்புச் சத்தம் கேட்டது. கண்ணுக்கிணியாள்தான் முதலில் எழுந்து போய்ப் பார்த்தாள். “வாங்க வாங்க..” என்று வருகிற யாரையோ வரவேற்றுவிட்டு உட்புறமாகத் திரும்பி, “மணவாளன் அண்ணன் வராரு...” என்றாள் அவள். பாண்டியன் எழுந்து வந்து மணவாளனை எதிர் கொண்டான்; முகம் மலரக் கை கூப்பி வரவேற்றான்.