பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து மூன்றாவது அத்தியாயம்

“தி தேடி வந்தேன்னு எங்க வீட்டிலே சொன்னாங்க. நான் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாகவே திரும் பிட்டேன். நீ மறுபடியும் ஒன்பது மணிக்கு வருவேன்னும் வீட்டிலே தெரிஞ்சுக்கிட்டேன். உடனே நீ இங்கேதான் வந்திருக்கணும்னு புறப்பட்டு வந்தேன்” என்றார் மணவாளன். பாண்டியனுக்கு அவருடைய எதிர்பாராத வரவு கனவி லிருந்து அடித்து எழுப்பியது போல் இருந்தது.

“என்ன உங்க ஊர்ப் பக்கம் எல்லாம் ஸ்டுடன்ட்ஸ் எப்படி இருக்காங்க?” என்று பாண்டியனைக் கேட்டார் மணவாளன். “எல்லா ஊர்லியும் ‘மல்லிகைப் பந்தல் ஸ்பிரிட்'தான் இருக்கு. சுயநலமும் எதேச்சாதிகாரமும், பதவி வெறியும் எங்கும் எதிர்ப்பு உணர்ச்சியைத்தான் உண்டாகியிருக்கின்றன. மனமும் சிந்தனையும் வளராத சிலர் மட்டுமே இன்னும் துதி பாடிகளாக இருக்கிறார்கள். மேரி தங்கத்தின் தற்கொலை விஷயம் வெளியே பரவிப் பத்திரிகைகளில் சிரிப்பாய்ச் சிரித்த பிறகு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு உணர்ச்சிதான் வலுவாயிருக்கிறது” என்றான் பாண்டியன்.

“உனக்குத் தெரியுமோ பாண்டியன்? நேற்றுத்தான் நிலக்கோட்டையிலிருந்து வந்த ஒருத்தர் சொன்னார். மேரி தங்கத்தின் பெற்றோர்கள் வாழைத்தோட்டத்துச் சிறை யிலிருந்து வெளி வந்து இப்போதுதான் சில நாட்களாக ஊரில் சகஜமாக நடமாடுகிறார்களாம். மிஸ்டர் சற்குணம் இன்னும்கூட மற்றவர்களிடம் எதைப் பற்றியும் பேசப் பயந்து நடுங்குகிறாராம்.”

“அவரைப் போல் பயந்து நடுங்குகிறவர்கள் இருக்கிற வரையில் இந்த நாட்டில் சுயநலமிகள் பாடு கொண் டாட்டம்தான்.”

இதற்குள் கண்ணுக்கினியாள் உள்ளே போய் அவர் கள் இருவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்திருந்தாள்.