பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27

விடுமுறைகளையும் கழிக்க முந்திய தினமே வார்டனிடம் அனுமதி பெற்று ஊருக்குப் போயிருந்தான். அறையில் கட்டிலில் தனியாகப்படுத்திருந்த பாண்டியன் எதிரே ஜன்னல் வழியே பல்கலைக் கழக மணிக்கூண்டு டவரின் உச்சியில் பறக்கும் புத்தம் புதிய மூவர்ணக் கொடியைப் பார்த்தான். உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டு களில் நடைபெற்ற மொழிப் போராட்டம் அவனுக்கு நினைவு வந்தது. சாலையில் போகிற கார்களை ஒன்று விடாமல் நிறுத்தி ஒழிக ஒழிக’ என்று எழுதியதும். தபாலாபீஸ் போர்டில் இந்தி எழுத்துக்களின் மேல் தார் பூசியதும், இரயில்களை மறித்ததும் லாரிகளை நிறுத்திக் கூட்டம் கூட்டமாக ஏறிச்சென்று பக்கத்து ஊர்ப் பள்ளி மாணவர்களையும் மொழிப்போரில் குதிக்கச் செய்ததும், அந்தப் போரில் சிலர் மாண்டதும், சிலர் தீக்குளித்ததும், சில போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. கார்களை நிறுத்திப் பெட்ரோல் வாங்கியதும், உண்டியல் குலுக்கிப் பணம் வசூலித்ததும் இன்னும் மறந்துவிடவில்லை.

இன்று அறிவும் ம ன மும் விசால மடைந்த பின் அவற்றைவிடப் பெரிய காரியங்களைப் பற்றிச் சிந்திக்கப் பழகியிருந்தான் அவன். கோடிக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடவும், வேலையில்லாமலிருக்கும் பட்டதாரிகள் வேலை பெறவும் அகில இந்திய - அகில உலக மனப்பான்மைகள் வளரவும் சிந்திக்கத் தொடங்கி யிருந்தார்கள், அவனைப் போன்ற மாணவர்கள். காலம் உணர்விலிருந்து அறிவுக்கு மாறியிருந்தது.

பள்ளிக்கூட நாட்களில்தான் இருந்த நிலையை இன்று திரும்ப நினைத்தபோது சிரிப்பு வந்தது அவனுக்கு. ஒவ் வொரு புத்தகத்திலும் முதல் இரண்டாம் பக்கங்களிலும், ‘தமிழ் வாழ்க என்று எழுதுவது அந்த நாட்களில் அவன் வழக்கம். இப்போது அப்படி எழுதும் வழக்கம் விட்டுப் போயிற்று. தமிழை வளர்க்க வேண்டும், வளர்ச்சியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/29&oldid=609470" இலிருந்து மீள்விக்கப்பட்டது