பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 289

மனிதர்களாகவே கருதக்கூடாது. அவர்களை மனித இனத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும். தெய்வபக்தி யற்றவர்களை நாம் மன்னிக்க முடியும். ஆனால் தேச பக்தி யற்றவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது; மன்னிக் கவும் கூடாது. இனிமேல் என்றைக்காவது வகுப்புக் குள்ளோ கல்லூரி எல்லையிலோ அந்தப் பேராசிரியர் தேசிய கீதத்தை எதிர்த்தோ, தேச ஒற்றுமையை எதிர்த்தோ பிரசாரம் செய்தால் அவரை வளைத்து மடக்கி கேராவ்’ செய்யுங்கள். மன்னிப்புக் கேட்கிறவரை விடாதீர்கள். அப்புறம்தான் அவருக்கும் புத்தி வரும்.”

கல்லூரி க்விஸ் புரோகிராமில் ஒரு விரிவுரையாளர் இன்ன அமைச்சரின் மனைவி பெயர் என்ன? என்பது போல் ஒரு கேள்வி கேட்டதாகவும், “அந்த அமைச்சரின் எத்தனையாவது மனைவியைப் பற்றிக் கேட்கிறீர்கள்?” என்று பதில் கூறிய மாணவன் திகைத்துப் போய் எதிர்க் கேள்வி போட்டதாகவும் ஒரு சம்பவத்தை மற்றொரு மாணவன் விவரித்தான். சிறிது நேரத்துக்குப் பின் தாங்கள் கொண்டு வந்திருந்த துண்டுப் பிரசுரங்களையும் நிதி வசூலுக்கான இரசீதுப் புத்தகங்களையும் அந்த விடுதி மாணவர்களில் சிலரிடம் ஒப்படைத்து விட்டுப் புறப் பட்டார்கள், மணவாளனும் பாண்டியனும், இரவு பத்து மணிக்குள் இப்படியே இன்னும் இரண்டு மூன்று கல்லூரி களைப் பார்த்து முடித்தபின் அவர்கள் வீடு திரும்பினார் கள். நடுவில் ஒரு கல்லூரி விடுதியில் அவர்களுடைய இரவு உணவு முடிந்திருந்தது. சில இடங்களில் போலீஸ் சி.ஐ.டி. ஆட்கள் தங்களைப் பின் தொடர்வதை அவர்களே உணர முடிந்தது. அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மண வாளனின் வீட்டுக்குத் திரும்பியதும் பட்டமளிப்பு விழாவுக்கு ஒருவாரம் முன்னதாகவே அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினான் பாண்டியன். “ஒரு இண்டர்வ்யூ வுக்குப் பம்பாய் போய் வரணும். போகலாமா விட்டு விடலாமா என்று யோசிச்சுக்கிட்டிருக்கேன். எங்கேயும்

ச.வெ-19