பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சத்திய வெள்ளம்

பிற்பகலில் அவனும் அந்த மாணவியும் வேறு சில மாணவர்களும் துணைவேந்தரை அவர் வீட்டில் போய்ப் பார்த்தார்கள். துணைவேந்தர் அ.முத்தலாக இருந்தார். பாண்டியன் அந்தப் பேச்சை ஆரம்பித்ததுமே, “பாண்டி யன், லெட் அஸ் ஃபர்கெட் வாட் ஹாப்பன்ட் இன் தி பாஸ்ட்.” என்று மெல்ல நழுவ முயன்றார் துணைவேந்தர். “புரொபலர் பூரீராமனைத் தாக்கியதை நீங்கள் ஏன் இன்னும் கண்டித்து அறிக்கை விடவில்லை?”

“அவரை யாரும் தாக்கியதாக எனக்குத் தகவல் இல்லையே?.”

“ஓகோ தாக்கியவர்களோ தாக்கப்பட்டவர்களோ உங்களிடம் வந்து சொன்னாலொழிய நீங்கள் அதற்காகக் கவலைப்படவோ, வருந்தவோ மாட்டீர்கள்; இல்லையா?” “ஆல்ரைட் யூ nம்ஸ் டு பீ வெரி ஆங்ரீ, எனிதிங் மோர் டு லேசி.”

“நத்திங் சார்! சொல்ல ஒன்றுமில்லை. செய்வதற்குத் தான் நிறைய இருக்கிறது” என்று பதில் சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்தான் பாண்டியன்.

“ஆர் யூ நாட் அஷேம்ட்.” என்ற கோபமாகத் துணை வேந்தரை நோக்கி ஏதோ ஆரம்பித்த கதிரேசனின் வாயைப் பொத்தி அவனையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் பாண்டியன். மாலையில் மாணவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று மோகன்தாஸ் தலைமையில் அண்ணாச்சியுடைய கடையின் பின்புறம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த நகரின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலரை மாணவர்கள் சந்தித்தார்கள். கலந்து பேசினார்கள். யாழ்ப்பாணத்து மாணவியிடம் மல்லை இராவணசாமியின் மகனும், கோட்டம் குருசாமியின் மகனும் தவறாக நடந்து கொண்டதையும், புரொபலர் பூரீராமன் போலீஸாரால் அவமானப் படுத்தப்பட்டதை யும் கண்டித்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியூர் மாணவர்களோடும், மணவாள