பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 297

னோடும் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினான் பாண்டியன். எதிர்ப்புக் கனல் எல்லா இடங்களிலும் பரவியது. பட்டமளிப்பு விழாவின் போது நடத்த வேண்டிய பெரிய போராட்டத்துக்கு முன் சக மாணவி ஒருத்திக்கும், வயது மூத்த பேராசிரியர் ஒருவருக்கும் இழைக்கப்பட்ட தீமைகளை எதிர்த்து முதலில் இந்தப் போராட்டத்தை அவர்கள் உடனே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இருபத்து நான்காவது அத்தியாயம்

யாழப்பாணத்து மாணவி பாலேஸ்வரிக்கும், இரசா யனப் பேராசிரியர் ரீராமனுக்கும் இழைக்கப்பட்ட அநீதி களை எதிர்த்துப் போராட முடிவு செய்த தினத்தன்று இரவு பாண்டியன் அண்ணாச்சியை சந்திக்க பதினொருமணிக்கு மேலாகிவிட்டது. வெளியே சென்றிருந்த அண்ணாச்சி அப் போதுதான் திரும்பி வந்திருந்தார். தேயிலைத் தோட்டங் கள் அதிகமாயிருந்த பக்கத்து மலைப்பகுதி ஒன்றிற்கு அன்று அதிகாலையிலேயே புறப்பட்டுப் போயிருந்த அவர் இரவு திரும்பி வந்து கூறிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் கவலை அளிக்கக்கூடியவையாக இருந்தன. அங்கே நடை பெற்ற தொழிற்சங்கத் தேர்தல் ஒன்றில் போலீஸார் பாராமுகமாக நடந்து கொண்ட விதமும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களின் வன்முறைகளும் பற்றி அண்ணாச்சி கதை கதையாகச் சொன்னார். தேசியத் தொழிற் சங்கத்தின் சார்பாகத் தொழிற் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டி யிட்டவரை ஒடுக்க நடந்த முயற்சிகளையும் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள தொழிற்சங்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை முயற்சிகளையும் அவ்வளவுக்கும் பின்னாலும் தேசிய சங்கத்தார் வெற்றி பெற்றதையும் அவர் விவரித்தார். பாண்டியன் அவரைக் கேட்டான்.