பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சத்திய வெள்ளம்

“நாட்டில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள் எல்லாரையும் பகைத்துக் கொண்டு, எல்லா ருக்கும் கெடுதல்கள் செய்துகொண்டு எப்படித்தான் இந்த ஆட்சி இன்னும் நீடிக்கிறதோ?”

“உன்னைப் போலொத்தவங்க இப்பிடிக் கேட்கிறப்ப எல்லாம் இது சாமான்யர்களின் ஆட்சி, மேட்டுக்குடி மக்கள் இதைக் கவிழ்க்கப் பார்க்கிறாங்கன்னு அமைச்சர் கரியமாணிக்கம் குய்யோ முறையோன்னு அலறி ஒரு ஒப்பாரி வைப்பாரு. இப்படி ஒப்பாரி வச்சே அவராலே எதிலேந்தும் தப்பிட முடியுது பாண்டியன்!”

“நீங்க சொல்வது சரிதான் அண்ணாச்சி! மாணவர் கள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து படிப்பைக் கவனிக்கவேண்டும். கலவரங்களிலும் ஆர்ப்பாட்டங் களிலும் ஈடுபடக் கூடாது’ என்று இப்போது அமைச்சர் கரியமாணிக்கம் எங்களுக்கு அறிக்கைகள் விட்டு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதே அமைச்சர், ‘செப்டம்பர் போனால் மார்ச், மார்ச் போனால் செப்டம்பர். பரீட்சையும் படிப்புமா முக்கியம்? முதலில் தமிழ்த் துரோகிகளை எதிர்த்துப் போரிடுங்கள்’ என்று அறிக்கைவிட்டு இரயில் பெட்டிகளை எரிக்கவும், பஸ்களைக் கொளுத்தவும் தூண்டினார்.”

“அண்ணைக்கு அவர் ஆட்சியிலே இல்லே. இண்ணைக்கு அவரே ஆட்சியிலே இருக்காரு. ஆட்சியைப் பிடிக்கிறவரை போராடச் சொன்னாரு ஆட்சியைப் பிடிச்சப்புறம் உங்களையெல்லாம் அமைதியாயிருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாத்தச் சொல்றாரு.”

“போராட வேண்டிய காலங்களில் அமைதியைப்பற்றி உபதேசிக்கிறவர்களும், அமைதியாயிருக்க வேண்டிய காலங் களில் போராட்டங்களைப் பற்றி உபதேசிக்கிறவர்களுமாக இங்கே சில சுயநலத் தலைவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்கிறார்கள். இது எல்லாரையுமே குழப்பிவிடுகிறது, அண்ணாச்சி!"