பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சத்திய வெள்ளம்

ஒன்றிலிருந்து மறுநாள் கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டி களை எடுத்து வந்தார்கள். அண்ணாச்சி, பாண்டியன், கதிரேசன் ஆகியவர்களும் மற்றும் நூறு மாணவர்களும் குளிரைப் பொருட்படுத்தாமல் இரவோடு இரவாகச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குப் புறப்பட்டார்கள். நகரை நான்கு பிரிவாகப் பிரித்துக் கொண்டு இருபத்தைந்து இருபத்தைந்து பேர்களாக அவர்கள் சுவரொட்டி ஒட்டு வதற்குச் சென்றிருந்தார்கள். கடை வீதியில் ஒவ்வொரு கடைக்கதவின் மீதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. காலை யில் கடையைத் திறக்க வருகிறபோது கடையடைப்பை நினைவூட்டுவதுபோல் அங்கங்கே சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். கடை வீதியில் கம்பளிக் கோட்டும் பனிக்குல்லாயுமாகக் கரும் பூதங்கள் நடப்பது போல் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் சுவரொட்டி ஒட்டும் மாணவர்களைப் பார்த்தார்கள். சுவரொட்டிகளை அவர்களும் நின்று படித்தார்கள். ஆனால் மாணவர்கள் செயலில் அவர்கள் குறுக்கிட வில்லை.

நகரத் தெருக்களிலும், பல்கலைக்கழக விடுதிச் சுவர் களிலும் போஸ்டர்களை ஒட்டிமுடித்து அவர்கள் திரும்பும் போது இரவு மணி மூன்று. ஆசிரியர்கள், பல்கலைக் கழக ஊழியர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருந்ததனால் ஊர்வலத்தைக் காலை பத்தரை மணிக்குப் பல்கலைக் கழக வாயிலிலிருந்து தொடங்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததுமே கடைவீதி வெறிச் சோடிக் கிடந்தது. எப்படிப்பட்ட அசாதாரணமான நிலை களிலும் கூடத் திறந்திருக்கும் பல உக்கடைகளே மூடப் பட்டிருந்தன. மாணவர்களும், மாணவிகளும் அன்று காலையில்தான் ஊரிலிருந்து திரும்பி வரத் தொடங்கி யிருந்தனர். விடுதி அறைகளில் போய்ப் பெட்டிப் படுக்கை களை வைத்துவிட்டு உடனே பல்கலைக் கழக வாயிலில்