பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 சத்திய வெள்ளம்

ரளாகக் கூடியிருந்தனர். போலீஸுக்கு எதிராகவும், எதேச் சாதிகார ஆட்சிக்கு எதிராகவும் கொந்தளித்துக் குமுறும் மனநிலையோடு கூடியிருந்தது அந்தப் பெருங் கூட்டம். நகரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள்கூட அன்று நடைபெறவில்லை. உயர் நிலைப் பள்ளி மாணவர்களும், எல்லாப் பள்ளிகளின் ஆசிரியர் களும்கூட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்து விட்டார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு வெளிநாட்டு மாணவியிடம் அநீதியாக நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை உடனே நீக்கக் கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளும், மேரிதங்கத்தின் தற்கொலைப் பற்றிய வாசகங்களும், பேராசிரியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பானர்களும் ஊர்வலத்தில் நிறைய இருந்தன. தடை உத்தரவு அமுலில் இருப்பதால் ஊர்வலம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்துவிட்டு அதற்கு மாணவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று அறியு முன்னேயே போலீஸ்காரர்கள் கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு வேண்டத் தொடங்கிவிடவே மாணவர்கள் ஆத்திரம் அடைந்துவிட்டனர்.

“ஆயிரம் தடைகள் இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஊர்வலமும் ஆர்ப்பாட்ட மும் நடந்தே தீரும்” என்று உரத்த குரலில் கூறினான் பாண்டியன். எல்லா மாணவர்களும், மாணவிகளும் மக்களும் அதே குரலைத் திருப்பி முழக்கினார்கள். எல்லாவற்றையும்விடக் கொடுமை போலீஸ் ஜீப்பிலேயே மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும் அங்கே ஏறிக்கொண்டு வந்திருந்ததுதான்.

“இவர்கள் எப்போது சார், போலீஸ் அதிகாரிகளாகச் சேர்ந்தார்கள்?” என்று மாணவர்களில் சிலர் பயமின்றிப் போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் கேட்கக்கூடத் தயங்க வில்லை. போலிஸ் ஜீப்பருகே அலைமோதும் மாணவர்