பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 சத்திய வெள்ளம்

தோளில் பரிவட்டம்தொங்கும் தரை மட்டும்இதுதான் மாவட்டம்’

என்று அங்கேயே இயற்றிய ஒரு கவிதையைக் கோட் டம் குருசாமியை நோக்கி அப்போதே உரத்த குரலில் மற்ற மாணவர்களின் சிரிப்பொலிகளுக்கு இடையே அரங்கேற்றி னான ஒரு மாணவன.

அங்கிருந்த போலீஸ் வேனில் போய் வயர்லெஸ் மூலம் யாரையோ கலந்து பேசிவிட்டுத் திரும்பி வந்து ஊர்வலத்துக்கு அனுமதி தர முடியும் என்றும் செல்லும் வழியை விளக்கி அனுமதி கேட்டு எழுதித் தரவேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி. பாண்டியன் அப்படியே எழுதிக் கொடுத்தான், மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறி வந்து நோட்டம் பார்த்தது மாணவர்களைக் குமுறச் செய்தி ருந்தது. போலீஸ் அதிகாரிகள் கட்சிச் செயலாளர், கட்சி எம்.எல்.ஏ. ஆகியோரின் எடுபிடிகள் போல் நடப்பதைக் கண்கூடாகக் கண்டார்கள் மாணவர்கள். போலீஸ் ஜீப்பில் வந்திருந்த காரணத்தால்தான் இராவணசாமியும், குருசாமி யும் மாணவர் கூட்டத்திலிருந்து தப்ப முடிந்தது. “ஊர் வலத்துக்கு அனுமதி பெறுகிறீர்கள்! வன்முறைகள் எதுவும் இன்றி அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும்” என்று தெரிவித்துவிட்டு உடனிருந்த கட்சிப் பிரமுகர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் போலீஸ் அதிகாரி.

ஊர்வலத்தினர் இரண்டு இரண்டு பேராக அணி வகுத்துச் செல்லுமாறு பாண்டியனும் மற்றவர்களும் ஒழுங்கு செய்தார்கள். முதலில் கண்ணுக்கினியாள் தலைமை யில் மாணவிகள் அணிவகுத்து நின்றனர்.

’பாலேசுவரியைப் பழி வாங்கிய போலீஸ் ஒழிக’ ‘பொய்வழக்குப் போடும் போலீஸ் ஒழிக” மேரிதங்கத்தைக் கொன்ற நிர்வாகம் திருந்தட்டும் பேராசிரியரை