பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 சத்திய வெள்ளம்

போலீஸ் அலுவலகம் இருந்தது. ஊர்வலத்தைப் போலீஸ் அலுவலக வாயிலிலேயே தடுத்து நிறுத்தி விடுவதாகவும் அதற்கு மேல் மாணவர்களின் பிரதிநிதிகள் ஐவர் ஆர்.டி.ஒ. அலவலகத்துக்குச் சென்று சந்தித்து மனுவைக் கொடுக் கலாம் என்றும் போலீஸ் தரப்பிலிருந்து முதலிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் அதற்கு இணங்கி யிருந்தார்கள். ‘ஊர்வலமே நடக்க விடாமல் செய்துவிட வேண்டும் என்றுதான் மேலேயிருந்து போலீஸ், ஆர்.டி.ஒ. துணைவேந்தர் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்தையும் கடையடைப்பையும் ஒடுக்க மேற் கொள்ளும் எல்லா முயற்சிகளுக்குமே ஆளும் கட்சியின் பிரமுகர்களும், கோட்டச் செயலாளர்களும், கட்சிச் செயல் வீரர்களும், ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் அமைச்சர்களே பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார்கள். இருந்தும் பொதுமக்கள், மாணவர்களின் எழுச்சியையும் கூட்டத்தையும் பார்த்துத் தயங்கி மறுபடியும் மேலிடத்தை வற்புறுத்தி வேண்டிய பின்பே போலீஸ் அதிகாரிகள் ஊர்வலத்தை அனுமதித்திருந்தார்கள்.

மிகப்பெரிய அந்த ஊர்வலம் பஜார் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. பஜார் ரோடு மல்லிகைப்பந்தல் நகரின் வீதிகளிலேயே மிகவும் நீளமானதாகும். வில்லின் முதுகு போல் தெருவின் நடுப்பகுதி மேடாகவும் மற்ற இரு முனைகள் தாழ்வாகவும் அமைந்த வீதி அது. நகரின் முதுகெலும்புபோல் இலங்கிய அந்தத் தெருவில்தான் குண்டு சி முதல் மோட்டார் சைக்கிள் வரை எல்லா வியாபாரங்களும் இருந்தன. மாணவர்களின் கோரிக்கை யைச் சாக்கிட்டு ஆட்சியின் மேல் தங்களுக்கு இருக்கும் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பும் சேரவே பஜார் ரோடு அன்று கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது. பஜார்ரோடில் நடுப் பகுதிக்குச் செல்லுகிறவரை கோஷங் களின் முழக்கம் தவிர வேறு எதுவும் சலசலப்போ பரபரப்போ இல்லை. பஜார்ரோடின் நடுப்பகுதியில் கோட்டச் செயலாளர் குருசாமிக்கு சொந்தமான அறிஞர்