பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 சத்திய வெள்ளம்

மாணவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பது ஊர்வலத்தின் முன் பகுதிக்கும் பரவியது. ஊர்வலத்தின் பிற்பகுதி இன்னும் வந்து சேராததன் காரணம் அப்போது இவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. டீக்கடை பாய்லர் கொதி நீரை டம்ளர்களில் வாரி மாணவர்கள் மேலே வீசி ஊற்றிய போதும், கடை முரடன் ஒருவன் முள் கரண்டியால் கதிரேசனை விலாவில் குத்தியபோதும், சோடாப் புட்டி ஆஸிட் பல்பு வீச்சின்போதும், போலீஸ் சும்மா பார்த்துக் கொண்டு நின்றது என்ற செய்தி பரவியதும் மாணவிகளை அடுத்து நின்ற மாணவர்களில் சிலர் “மேரிதங்கம் மாண்டது போதாதா? இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள்?” என்று கூப்பாடு போட்டபடி போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்றார்கள். அப்போது சாலையில் ஒரமாகக் குவித்திருந்த சரளைக் கற்கள் மாணவர்களின் பார்வையில் பட்டது. தங்களுக்குப் பாதுகாப்புத் தராத போலீஸின் மேல் ஆத்திரம் அடைந்த அவர்கள் கல் வீச்சில் இறங்கினார்கள். போலீஸ் அலுவல கத்தை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் பறந்தன. பஜார் ரோட்டில் ஹோட்டல் வாயிலில் நடந்த சோடாப் புட்டி வீச்சில் யாரோ ஒரு மாணவன் இறந்து போனதாகவும் அப்போது ஒரு செய்தி வந்து பரவவே முன் வரிசை மாணவர்கள் வெறி கொண்டனர். கால்மணி நேரத்துக்குப் பின் ஊர்வலத்தின் பின்பகுதியினர் வந்தபின்புதான் கல்வீச்சு நின்றது. மாணவர்கள் யாரும் இறக்கவில்லை என்ற உண்மையைப் பாண்டியனே வந்து தெரிவித்த பின்புதான் இவர்கள் நம்பினார்கள். எனினும் ஹோட்டல் முரடன் கதிரேசனைக் குத்திவிட்டான் என்பது அவர்கள் கோபத்தை மிகவும் கிளறுவதற்குப் போதுமானதாயிருந்தது.

பாண்டியன் முதலிய மாணவர்கள் மகஜரை எடுத்துக் கொண்டு அதைக் கொடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத் துக்குள் சென்றிருந்த பொழுது போலீஸ் நிலையத்துக் குள்ளிருந்து அதே பழைய ஜீப்பில் மல்லை இராவண