பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 313

சாமியும், கோட்டம் குருசாமியும் வெளிவரவே வெளியே நின்றிருந்தவர்களிடம் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது. ஜீப் மறிக்கப்பட்டது. கூட்டத்திலிருந்து யாரோ கழற்றி எறிந்த செருப்புக்கள் ஜீப்பின் மேல் வந்து விழுந்தன. அதைத் தொடர்ந்து பல செருப்புக்களும், சரமாரியாகக் கற்களும் ஜீப்பின் மேல் விழவே நிலைமை தீவிரமாகியது. ஜீப்பில் இருந்த கட்சி ஆட்கள் இருவருடைய தலையீட் டால் தான் போலிஸே தவறாக நடக்கிறது என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்ததனால் ஒரு தவிர்க்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜீப்பும் அதிலிருந்த ஆட்களும் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்டதை அடுத்து முன் எச்சரிக்கையில்லாமல் யாரும் எதிர்பாராத விதமாகப் போலீஸார் கூட்டத்தில் தடியடிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர். ஆத்திரம் அடைந்த மாணவர் களில் சிலர் போலீஸார் மேலேயே கல்லெறியத் தொடங் கினார்கள். போலீஸாரின் திடீர்த் தாக்குதலால் மாணவி கள் நிலைகுலைந்து ஒடத் தொடங்கியதால் அவர்களிலும் சிலர் காயமடைய நேரிட்டது. தடியடிப் பிரயோகமும் வரம்பு மீறி நடந்தது. மூக்கு முகம் பாராமல் மாணவர் களை அடித்துத் தள்ளினார்கள் போலீஸார். தன்னுடைய ஹோட்டலுக்குப் பெருஞ்சேதம் விளைந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சினத்தாலும், தானும் இராவணசாமியும் அமர்ந்திருந்த ஜீப்பின் மேல் செருப்பு வீச்சு, கல்வீச்சு நடைபெற்ற அவமானத்தினாலும் கோட்டச் செயலாளர் அருகே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டுத் துரண்டியதால்தான் தடியடிப் பிரயோகமே நடந்ததாக மாணவர்களிடையே செய்தி பரவிவிட்டது. ஹோட்டல் வாசலில் காயமுற்றிருந்த மாணவர்கள் ஏற்கனவே ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டிருந்தது தவிர இப்போது தடியடிப் பிரயோகத் தினால் வேறு நாற்பது நாற்பத்தைந்து மாணவர்களுக்கு மேல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸோ, போலீஸ் வேனோ உடன் கிடைக்கவில்லை. கண்ணுக்கிணியாளும்,