பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 சத்திய வெள்ளம்

மருத்துவக் கல்லூரி மாணவிகளும் எதிரே இருந்த தொழிற் சாலை ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டிகளை வரவழைத் துக் காயம்பட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்யத் தொடங்கிவிட்டார்கள். மரத்தடிகளிலும், பிளாட் பாரத்து ஓரங்களிலும், அடிபட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்து காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தபோது மகஜர் கொடுப்பதற்காக ஆர்.டி.ஒ. அலுவலகம் சென்றிருந்த பாண்டியன் முதலியவர்கள் திரும்பி வந்தார்கள். நடந்தவற்றை அறிந்து சினத்தோடு போலீஸ் தலைமை அலுவலகத்தில் புகுந்து அவர்களைச் சந்திக்கவோ, பேசவோ மறுத்தார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. மனிதாபிமான நோக்கமோ, கருணையோ, அன்புள்ளமோ இல்லாத அந்த வறட்டு அதிகார வர்க்கத் தைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் இளம் உள்ளங்கள் குமுறின. அவர்கள் கண்முன்பாகவே அப்போது அங்கு இன்னொரு நாடகமும் நடந்தது. போலீஸ் அலுவலக காம்பவுண்டுக்குள் நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் பெட்ரோல் ஊற்றி அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலரே அதற்கு நெருப்பு வைத்தனர்.

“அவர்களே ஜீப்புக்கு நெருப்பு வைத்துவிட்டு நம் தலையில் பழியைப் போடப் போகிறார்கள். நாங்களாக மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் செய்யவில்லை. அவர்கள் ஸ்டேஷனுக்குள் அத்துமீறிப் புகுந்து ஜீப்புக்கு நெருப்பு வைத்ததால்தான் நாங்கள் தடியடிப் பிரயோகம் செய்ய நேரிட்டது என்று போலீஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படும் செய்தி நாளைக் காலைப் பத்திரிகை களில் வரும். அதிகாரிகள் என்பவர்கள் இப்போதெல்லாம் தவறுகளைச் செய்யாமலிருக்க முயலுவதில்லை. பல சமயங்களில் செய்து விட்ட தவறுகளை நியாயப்படுத்தவே அதிகமாக முயலுகிறார்கள் அவர்கள். பதவியில் உள்ளவர் களின் போக்கு அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய போலீஸார் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கைக்கூலிகள்