பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 319

பிடிவாதமாக இருந்தார்களானால் அந்தப் பிடிவாதத்தை வைத்தே அவர்களுடைய உள்நோக்கத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று முயன்றபோதும் துணைவேந்தர் தோற்றார். அதன் மூலமும் தங்கள் நோக்கம் அவருக்குத் தெரிய விடாமல் காத்துக் கொண்டு விட்டார்கள் மாணவர்கள். சி.ஐ.டி. ரிப்போர்ட் மூலம் மந்திரிக்குத் தெரிந்து, மந்திரி துணைவேந்தரைக் குடைந்தும் துணைவேந்தரால் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் போது தகராறு செய்வார்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அரை மணி நேரம் அவர் முன்னிலையில் நடித்துவிட்டுப் பின்பு மெல்ல விடை பெற்று எழுந்து வந்தார்கள் பாண்டியனும் மோகன் தாஸும். இது நடந்த மறுநாள் காலை பத்தரை மணிக்கு வகுப்புக்காகப் போய்க் கொண்டிருந்த பாண்டியனைப் பல்கலைக் கழக மைதானத்தில் உள்ளூர் மாணவி ஒருத்தியை யும் உடன் அழைத்துக் கொண்டு வந்து பாதி வழியில் சந்தித்தாள் கண்ணுக்கினியாள். எதிரே அவர்களைக் கண்டதும் பாண்டியன் தயங்கி நின்றான்.

கண்ணுக்கிணியாள் சொன்னாள்: “இவள் பி.எஸ்ஸி. முதல் வருடம் படிக்கிறாள். பெயர் பத்மா. ஊருக்குள்ளி ருந்து தினம் டவுன் பஸ்ஸில் இங்கே வருகிறாள். ஊருக் குள்ளிருந்து யூனிவர்ஸிடிக்கு வரும் டவுன் பஸ்களின் ரூட் உரிமையாளர் இராவணசாமி என்பது உங்களுக்குத் தெரி யும். பத்து நாட்களாக இவள் வருகிற காலை 9.45 பஸ்ஸில் யாரோ ஒரு புதுக் கண்டக்டர் இவளோடு தகராறு செய்கிறானாம். தோள் பட்டையில் இடிப்பது, டிக்கட் கொடுக்கும் போது கையில் தொட்டு அழுத்திக் கொடுப் பது, மேலே இடிப்பது, சாய்வது போல் என்னென்னமோ வம்பெல்லாம் பண்ணுகிறானாம். இவள் பயத்தினாலும் கூச்சத்தினாலும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். இன்றைக்குத் தான் என்னிடம் சொன்னாள். அந்தக் கண்டக்டருக்கு நாம் எப்படிப் புத்தி புகட்டுவது?"