பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 321

முடிவில் எப்படியோ அது வளர்ந்து பெரிய அடிதடியாகி விடும். பல்கலைக் கழகத்துக்கு வரும் பஸ் போக்குவரத்து மல்லை இராவணசாமிக்கு உரியதாகிய பின் இந்த மோதல் கள் மிகவும் அதிகமாயிருந்தன. முன்பு ஒருமுறை இப்படி ஒரு பூசல் நடந்தபோது மாணவர்களுக்கும், பஸ் ஊழியர் களுக்கும் மூண்ட போரில் மாணவர்கள் மேல் மட்டும் தடியடிப் பிரயோகம் நடந்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குப் பின் அமைச்சர் கரிய மாணிக்கம், மல்லை இராவணசாமியின் பஸ்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசும்போது “இந்த அரசு உங்கள் அரசு! ஒரு வாரத்துக்கு முன் உங்களிடம் வம்பு செய்த மாணவர்களுக்குத் தடியடி கிடைத்தது. உங்களுக்கோ அதனால் நியாயம் கிடைத்தது” என்று ஏதோ தத்துப் பித்தென்று உளறிப் பேசி அது எதிர்க் கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து விட்டது. அந்தப் பேச்சிலிருந்த மாணவர் விரோதப் போக்கை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த மந்திரி எந்த ஊருக் குப் போனாலும் மாணவர்கள் ஒழிக” கோஷத்துடனும், கறுப்புக் கொடிகளுடனும் அவரை எதிர்த்தார்கள். சில மாதங்கள் வரை எங்கும் மாணவர்களுக்கு முன் அந்த அமைச்சர் தலைகாட்ட முடியாமலே இருந்தது. அப்போது மணவாளன் தான் மாணவர் தலைவராயிருந்தார். அந்தப் போரை அவர் முன்னின்று நடத்தியிருந்தார்.

இப்போது மாணவி பத்மாவுக்கு பஸ்சில் ஏற்பட்ட அநுபவத்திலிருந்தும் ஒரு பெரிய போராட்டம் விளைந்து அதனாலேயே பட்டமளிப்பு விழா நாலைந்து மாதங் களுக்குத் தள்ளிப் போய்விடுமோ என்று நினைத்தான் பாண்டியன். ஆனால் இரு பக்கத்து உண்மையும் தெரியாமல் அதை அவன் பெரிதாக்க விரும்பவில்லை. பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறியவும், தடுக்கவும் துணவேந்தர் தவிப்பதையும் கூட அவன் புரிந்து கொண்டிருந்தான். அரசாங்கமோ

ச.வெ-21