பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 சத்திய வெள்ளம்

தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பாண்டியனிடம் சொல்லத் தொடங்கினார்கள். குறிப்பாக மல்லை இராவணசாமியின் பஸ்களில் அவர் தம் கட்சி ஆட்களாகவே வேலைக்கு வைத்திருந்ததால் இப்படி அடிக்கடி தகராறுகள் வருவதாக மாணவர்கள் தெரிவித்தார்கள்.

இப் பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் காண்டீனில் சிறிது நேரம் அதிகமாகத் தாமதித்துவிடவே அடுத்த வகுப்பு காலந்தாழ்த்திப் போக நேர்ந்தது. அது பேராசிரியர் பூதலிங்கத்தின் பொருளாதார வகுப்பு. அவருடைய வகுப்புக்குத் தாமதமாகப் போய் நுழைவது மாணவர் களுக்கே பிடிக்காத காரியம். பாண்டியனும் மற்ற மாணவர்களும் பேராசிரியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தார்கள். கரன்ஸி அண்ட் பேங்கிங் பற்றி விரிவுரை நடந்து கொண்டிருந்தது. வகுப்பு முடிந்து வெளியேறும்போது, “பாண்டியன்! முடிந்தால் மூன்று மணிக்கு என்னை டிபார்ட்மெண்ட் அறையில் வந்து பார்” என்று சொல்லிவிட்டுப் போனார் பேராசிரியர் பூதலிங்கம். பகல் உணவுக்குப் பின் அறைக்குப் போய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிற்பகலில் முதல் வகுப்பாகிய தமிழ் வகுப்புக்குப் போனான் பாண்டியன். அன்று முத்து மாணிக்கம் என்ற புது விரிவுரையாளர் வந்தார். வகுப்பை முப்பதாவது நிமிஷத்திலேயே முடித்து மாணவர்களைப் போகச் சொல்லிவிட்டுவிட்டார் அவர் இரண்டே முக்கால் மணிக்கே எகனாமிக்ஸ் டிபார்ட்மென்ட் மாடிக்குப் போய்ப் பூதலிங்கம் சாரைப் பார்க்க வசதியாயிருந்தது பாண்டி யனுக்கு. பேராசிரியர் அவனை அன்போடு வரவேற்று உட்காரச் சொன்னார். பியூனைக் கூப்பிட்டு இரண்டு டீ வாங்கி வரச் செய்து அவனுக்கும் கொடுத்துத் தாமும் குடித்தபின் மெல்லப் பேச்சைத் தொடங்கினார். “பாண்டியன்! இது நமக்குள்ளே இருக்கட்டு! என் காதிலே விழுந்ததை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. பட்டமளிப்பு விழாவுக்குள்ளே மாணவர்