பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சத்திய வெள்ளம்

“நானே அடிக்கடி சொன்னப்பல்லாம் நீ கேட்கலே! பாஸஞ்சர்கிட்டே துடுக்காப் பேசாதே! அடக்கமா வேலை யைப் பாருன்னாக் கேட்கமாட்டே.” என்று கண்டக்டரைக் கண்டித்தான் அவன். டிரைவர் இப்படிக் கண்டித்ததும் கண்டக்டர் அவனையும் திட்டத் தொடங்கினான். தூரத்தில் நின்றிருந்த வேறு பஸ்களின் கண்டக்டர்கள் சிலரும் கூடி ஒன்று சேர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் பாண்டியன் சமயோசிதமாக ஒரு காரியம் செய்தான். “இனிமேல் இது எங்கள் பிரச்னை! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எல்லாரும் வகுப்புக்களுக்குப் போகலாம். தயவு செய்து இங்கே நிற்க வேண்டாம்” என்று கூறிக் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளை மட்டும் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தான். ஒரு கலகம் மூளுவதைத் தவிர்க்க முடியாது போலிருந்தது. “சாயங் காலம் நாடகம் ஞாபகமிருக்கட்டும்” என்று போகும்போது அந்த அவசரத்திலும் கூடக் கண்ணுக்கினியாள் சொல்லி விட்டுப் போனாள். பாண்டியன் மாணவிகளை அனுப்பி விட்டுத் திரும்பி வருவதற்குள்ளேயே மற்ற மாணவர் களுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் பேச்சு வார்த்தை தடித்து விட்டது. “நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிகளோடதானே பொறந்திருக்கீங்க?...” என்று சூடாகக் கேட்டான் ஒரு மாணவன். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் அதற்குத் துடுக்காக ஏதோ, பதில் சொன்னான். அதற்குள் பாண்டியன் நடுவில் பாய்ந்து இரு சாராரையும் தடுத்து, எல்லா மாணவர்களையும் அந்த பஸ்ஸில் ஏறச் சொன்னான். மாணவர்கள் ஏறிக்கொண்டார்கள். “இந்தாப்பா! நாங்கள் ஒசிப் பயணம் செய்கிறோம்னு நினைக்காதே. எல்லாருக்கும் டிக்கெட் கொடு. நேரே உங்க முதலாளி வீட்டுக்குப் பஸ்ஸை விடு! நாங்களே அவரிடம் மானம், மரியாதை, மதிப்பைப் பற்றிப் பேசிக்கிறோம். உங்ககிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லை” என்று இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீண்டினான். கண்டக்டர் அதை வாங்காமல் காறித் துப்பிவிட்டு