பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சத்திய வெள்ளம்

தயக்கத்தோடு சிந்தித்தாள் அவள் யாரோடு பேசி விவரங் களை அறிவது என்று திகைப்பு ஏற்படவே, அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டியதாயிற்று. உடை மாற்றிக் கொண்டு ஒரு கிளாஸ் தண்ணிர் பருகியபின் விளக்கை அணைத்துவிட்டு அவளும் படுத்தாள். உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு கரையில் இழுத்தெறிந்த மீனாகப் படுக்கையில் தவித்தாள் அவள். எப்போது விடியும் என்று மனம் பதறியபடியே படுத்திருந்தவள் தன்னையும் மீறிய அயர்ச்சியில் சிறிது கண்ணயர்ந்தாள். விடிந்ததும் உடனே தினசரிப் பத்திரிகைகள் கிடைக்காத ஊர் மல்லிகைப் பந்தல். மதுரையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி, சென்னையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி காலை ஒன்பது மணிக்கு மேல்தான் மல்லிகைப் பந்தல் நகர எல்லைக்குள்ளேயே வந்து சேரும். அதனால் செய்தித் தாளிலிருந்து தகவல் தெரிந்து கொள்வதற் குள் யாரிடமாவது விசாரித்தே தெரிந்து கொண்டு விடலாம் என்று விடிந்ததும் பல் விளக்கிவிட்டு அறைத் தோழியோடு வெளியேறினாள் கண்ணுக்கினியாள். காப்பிக்காக மெஸ்ஸுக்குள் நுழைந்தபோதே அவள் எதிர் பார்த்த தகவல் தெரிந்துவிட்டது. முந்திய இரவு ஏழுஏழரை மணிக்கு மல்லை. இராவணசாமியே வழிக்கு வந்து மாணவி பத்மாவிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டரைக் கொல்லைப்புறம் வழியாகத் தமது பங்களாவுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு முன்னால் நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டாராம். ஆனால் மன்னிப்புக் கேட்டு முடிந்து மாணவர்கள் கோபம் தணியும் வரையில் தந்திரமாக இருந்த இராவணசாமி இருளில் தம் பங்களாவிலிருந்து வெளியேறிய மாணவர்களைப் பாதி வழியில் ஆட்களை அனுப்பித் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தாராம். மாணவர் கள் சேர்ந்து கூட்டமாகத் திரும்பி வந்து கொண்டிருந்த தாலும் அண்ணாச்சி முதலியவர்கள் துணைக்கு இருந்த தாலும் இராவணசாமி அனுப்பிய முரடர்களைச் சமாளித்து