பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சத்திய வெள்ளம்

லாரிகளில் குண்டர்களை அனுப்பி எங்களைத் தாக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். நாங்கள் கூட்டமாகச் சேர்ந்தி ருந்து தாக்க வந்தவர்களை விரட்டியடித்தோம். அப்புறம் இங்கே ஹாஸ்டலுக்குத் திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. மன்னித்துக் கொள்! நீ திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தும் இந்தக் கலவரங்களினால் உன் நாடகத் துக்கும் கதகளிக்கும் வரமுடியாமல் போய்விட்டது. அந்தப் பெண் - அதுதான் உன் சிநேகிதி பத்மாவிடம் இனிமேல் பயப்படாமல் தினமும் பஸ்ஸில் வரலாம் என்று சொல்லு” என்றான்.

“எங்க நாடகமும் முடிந்து நான் அறைக்கு வரப் பதினொரு மணிக்குமேல் ஆயிடிச்சு. எனக்கு உங்களைப் பத்தி ஒரே கவலை. விசாரிச்சுத் தெரிஞ்சுக்கவும் முடியலே. இராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் தவிச்சுப் போனேன்.” “நீ கவலைப்பட்டுத் தவிச்சிக்கிட்டிருப்பேன்னுதான் ராத்திரியே உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல நினைச்சோம். ஃபோன் பண்ண முடியாமப்போச்சு. அண்ணாச்சியும் கடையைப் பூட்டிக்கிட்டு எங்களைப் பார்க்க அங்கே வந்திட்டாரு. அவரும் வேற சில ஆட்களும் எங்களைத் தேடிக்கிட்டு அங்கே வந்திருக்காட்டித் துரத்தி அடித்து வந்து விரட்டின குண்டர்ங்ககிட்டேயிருந்து நாங்கத் தப்பி யிருக்க முடியாது. அண்ணாச்சியும் அவரோட ஆட்களும் வந்து நின்னது எங்களுக்குப் பெரிய பாதுகாப்பா இருந் திச்சு” என்றான் பாண்டியன். கண்ணுக்கினியாள் தன் பதிலில் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.

“சரி! அது போகட்டும். எடுத்த காரியத்தை வெற்றியா முடிச்சாச்சு. பேரவைத் தேர்தல் முடிஞ்சு தலைவர், செயலாளர் எல்லாரும் வந்தப்புறமும் கூட மாணவர் பேரவைத் தொடக்க விழாவையோ, மாணவர்களின் விவாத அரங்கையோ நாம் இன்னும் நடத்தவில்லை. இங்கே பல மாணவ மாணவிகளுக்கு இது ஒரு பெரிய குறையாக இருக்கும் என்று தெரிகிறது."