பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 339

திடீரென்று நுழைந்த ஒரு மாணவன் ஏற்கெனவே ஒரு நாற்காலியில் மற்றவன் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்தெறிந்துவிட்டுத் தான் முந்திக்கொண்டு சாப்பிட உட்காரவே, வாஷ்பேசினில் கைகழுவப் போயிருந்த கைக்குட்டையின் உரிமையாளன் திரும்பி வந்து இரைந்து கத்தி, சண்டை போடத் தொடங்கி அதுவே கைகலப்பாக முற்றிவிடும் போலிருந்தது. பாண்டியன் இருவருக்கும் நடுவே குறுக்கிட்டுச் சமாதானப்படுத்தி வைத்தான்.

பிற்பகல் வகுப்புக்கு அவன் போகவில்லை. இரண்டே கால் மணிக்கு நூல் நிலைய வாயிலில் கண்ணுக்கினி யாளை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான். இரண்டரை மணிக்கு அவள் வந்தாள். வெளிர் நீல வாயில் புடவை யோடு அப்போது அவள் தன்னைத் திரும்பத் திரும்பப் பார்க்கவைக்கும் கவர்ச்சி நிறைந்து அவன் எதிரே வந்து நின்றாள். அவளது மை தீட்டிய வசீகர விழிகளும், சிவந்த மாதுளை இதழ்களும் அவன் மனத்தைச் சூறையாடின. அவன் சொன்னான்: “சினிமாப் பார்க்கப் போகவேண் டாம்! உன்னையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போல் தோன்றுகிறது! ரொம்ப நாளைக்குமுன் லைப்ரரியில் ‘தீபன் எழுதிய அரும்பிய முல்லை என்ற புத்தகத்தில் ஒரு கவிதை படித்தேன். உன்னைப் பார்த்ததும் இப்போது மீண்டும் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.”

“எங்கே? அந்தக் கவிதையைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் தெரிந்துகொள்கிறேன்.”

“மங்கைப் பருவம்உன் மேனி முழுவதும்

பொங்கி வழியுதடி! செங்கையின் வீச்சினிலும்-உன்தன் செந்தமிழ்ப் பேச்சினிலும்-இள அன்னநடை தன்னிலும்-நீ

அங்குமிங்கும் ஒடிஆடித் திரியும் மின்னல் நடைதன்னிலும்-அந்த

மெட்டி குலுங்கும் இசை தன்னிலும்-இள மங்கைப் பருவம் பொங்கி வழியுதe!