பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 34;

போல் அவர்கள் அப்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே பரஸ்பரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்றேகால் மணிக்குத் தியேட்டரில் நுழைந்தபோது படம் தொடங்க இன்னும் கால்மணி நேரமே இருந்தது.

அந்தப் படமும் உருக்கமான காதல் கதையை மையமாகக் கொண்டது. ஆங்கிலப் படமாதலால் பட்டுக் கத்தரித்தது போல் சுருக்கமாக எடுத்திருந்தார்கள். மூன்றரை மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்து விட்டது. வெளியேறும்போதுதான் தங்களைப் போலவே பல மாணவ மாணவிகளின் இணைகள் அங்கு படத்துக்கு வந்து திரும்புவதை அவர்கள் காண முடிந்தது.

படம் விட்டதும் சிறிது தொலைவு பேசிக் கொண்டே மலைச் சாலையில் உலாவச் சென்றார்கள் அவர்கள். இரவு உணவும் வெளியில் ஒரு ஹோட்டலிலேயே முடிந்தது. இரவு பத்து மணிக்குள் இருவருமே பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி அவரவர் விடுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

மறுநாள் காலையில் தினசரிகளில் மாநில அமைச்சர் களில் ஒருவர் மாணவர்களைப் பற்றிப் பேசிய பேச்சு ஒன்று வெளி வந்திருப்பதைப் பாண்டியன் படித்தபோது அவனுக்கு ஆத்திரம் மூண்டது. “மாணவர்கள் தாங்கள் மாணவர்களாக இருப்பதாலேயே எதை எதிர்த்தும் எப்படியும் போராட முன் வருவார்களேயானால் அதன் பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். படிப்பைத் தவிர அவர்கள் வேறு வழிக்கு வரக்கூடாது. விஷயங்களின் நியாயம் அநியாயங்கள் புரியக் கூடிய பக்குவம் வரு முன்னால் அரை வேக்காடுகளாக நம் நாட்டு மாணவர் கள் நடந்து கொள்வதாகவே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் உருப்பட வேண்டு மானால் அங்கே முதலில் மாணவர்கள் யூனியன்களைக் கலைக்க வேண்டும். மானவர் தலைவர்கள்,