பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 சத்திய வெள்ளம்

குறித்துக் கொண்டார். அதைப் பற்றி அவள் கவலையோ பதற்றமோ அடையவில்லை. கறுப்புக்கொடி ஆர்ப் பாட்டம் முடிந்து மாணவிகளோடு அவள் விடுதிக்குத் திரும்பி ஒரு மணி நேரம் கழித்துப் பெண்கள் விடுதியின் பிரதம வார்டன் அம்மையார் உடனே வருமாறு அவளைத் தன் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். வார்டனின் அறைக் குள் கண்ணுக்கினியாள் நுழைந்தபோது அந்த அம்மை யார் மிகவும் கோபமாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை எதிர்கொண்டாள். “நீ படிக்கத்தானே இங்கே வந்திருக்கே?” என்ற வார்டனின் முதல் கேள்வியே கடுமையாக அவள் முகத்தில் வந்து அறைவதுபோல் இருந்தது.

இருபத்தெட்டாவது அத்தியாயம்

வார்டனின் வழக்கத்தை மீறிய கடுமை கண்ணுக்கினி யாளுக்குப் புதுமையாக இருந்தது. மாணவிகள் விடுதியான ஒளவை மனை, ஆண்டாள் மனை, இரண்டிற்கும் பொது வான பிரதம வார்டன் அம்மையார், அந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அவள் கலந்து கொண்டதற்கா கவும் தலைமை தாங்கி மாணவிகளை அழைத்துச் சென்ற தற்காகவும், அவளைக் கோபமாகக் கண்டித்தாள். எப் போதும் தன்னிடம் ஒரளவு பிரியமாயிருக்கும் வார்டனின் கண்டிப்பு அன்று அதிகமாயிருந்ததுபோல் தோன்றியது அவளுக்கு.

“தடை உத்தரவு அமுலில் இருக்கிறபோது நீ நூறு மாணவிகளுக்குமேல் அழைத்துக் கொண்டு போய் மந்திரிக்குக் கறுப்புக்கொடி காட்டியிருக்கிறாய்! நீங்கள் எல்லாருமே பெண்கள் என்பதால் போலீஸ் தயக்கத்தோடு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. ஏதாவது அசம்பா விதம் நடந்திருந்தால் பதில் சொல்ல வி.சி.க்கு முன்னால் நான் போய்க் கைகட்டி நிற்க நேர்ந்திருக்கும். உன்னால் இந்த ஹாஸ்டலின் பேரே கெட்டுப்போய் விடாமல்