பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33

நிற்கும் மாணவர்களை விட்டுவிட்டு அன்று காலையில் தான் புதிதாக அறிமுகமாகியிருந்த ஒரு மாணவியோடு தனியே பேசப் போவது அந்த மாணவர்களை எப்படி எப்படி உணர வைக்குமோ என்று ஒரு விநாடி கூசினான். அதற்குள் “ஐ திங் ஐயாம் நாட் டிஸ்டர்பிங் யூ” என்று மீண்டும் அவள் குரல் குழையவே, அவன் அவளைப் புறக்கணிக்க அஞ்சி அவளோடு சிறிது தொலைவு நடந்து சென்றான். இன்னும் அதிகம் பழகாத ஒர் இளம் பெண்ணோடு நடந்து செல்வதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி உள்ளே நிறைந்துகொண்டிருந்தது. புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுகளுமாக எங்கெல்லாம் ஒர் அந் நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சுவர்க்கங்கள் படைக்கப்படுகின்றன என்ற அர்த்தமுள்ள ஒர் ஆங்கிலக் கவிதையை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

“காலையில் அண்ணாச்சி கடையில் நடந்ததை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்காக என்னை மன்னித்துவிட வேண்டும்.” -

“தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் தானே?” “நான் செய்தது அதிகப்பிரசங்கித்தனம் என்று நீங்கள் நினைத்ததாக என் மனத்தில் பட்டது. அதனால் தான் மன்னிப்புக் கேட்கிறேன்.”

“மன்னிப்புக் கேட்கவோ, மன்னிக்கவோ அவசிய மில்லாத சின்ன விஷயம் இது.”

“அப்படியில்லை ! உங்களுக்கு ரோஷம் ஊட்டி உங்க ைள எ ப் படியா வது மாண வர் பேர ைவ ச் செயலாளராகப் போட்டியிடச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் அதைச் செய்ய நேர்ந்தது.”

“அதிலே தவறில்லை! ஒரு பெண் காரணமாக ஏற் பட்ட ரோஷத்தில்தான் இராமாயணம், பாரதம், சிலப் பதிகாரம் எல்லாமே நடந்திருக்கின்றன. நீங்கள் வளை யலைக் கழற்றி எறிந்த அந்த விநாடியில் எனக்கும் கோபம்

ச.வெ-3 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/35&oldid=609647" இலிருந்து மீள்விக்கப்பட்டது