பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 சத்திய வெள்ளம்

அவள் கையெழுத்தை ஒத்த எழுத்துக்களில் வேறு யாரோ எழுதியதுபோல் தோன்றுகிறது என்று அந்த வலுவான சாட்சியம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மந்திரிகளின் வீடு தேடிப் போய் அவர்களுக்கு மாலையிட்டு வணங்கக்கூடிய நீதிபதிகளும் ஏதாவது வழக்குக்காக மந்திரிகள் நீதிமன்றம் வந்தாலும் பயந்து எழுந்து நிற்கக் கூடிய நீதிபதிகளும் நிறைந்துவிட்ட நீதிமன்றத்திலிருந்து நீதியும் முறையாகக் கிடைக்காது என்பதை அந்தச் சம்பவம் விளக்கிவிட்டது. சட்டங்கள் உருவாகும் இடங்களும் ஒழுங்கற்றுப் போய் விட்ட சமூகத்தில் மக்கள் கொந்தளித்து எழுவது ஒன்றே நியாய மார்க்கமாக மீதம் இருக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்கிற காலமாக அது இருந்தது. இந்த விசாரணைக்காக அரசாங்கமே தனக்குச் சாதகமான தன்னால் பதவி உயர்வு பெற்ற ஒரு நீதிபதியைத் தேடி நியமித்திருந்தது தான் இதற்குக் காரணம்.

அந்த நீதிபதி சட்ட மந்திரி வெளியூர் போகும் போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்குப் போய் எல்லாரையும் போல் கைகூப்பி நின்று அவரை வழியனுப்புகிற அளவு தரம் இறங்கிவிட்டவர். சட்ட மந்திரி வீட்டுத் திருமணத்துக்கு இரண்டு பவுனில் இரண்டு தனித்தனி மோதிரங்கள் செய்து கொண்டுபோய் மணமக்களுக்கு அவற்றைப் பரிசு தந்தவர். சட்ட மந்திரி கூப்பிட்டு வந்து பார்க்கச் சொன்னால் இரகசியமாக வீடு தேடிப்போய் அவரைப் பார்க்கிறவர். இவை ஊரறிந்த விஷயங்களாகியிருந்தன. நீதி மன்றங்களிலிருந்து நீதி கிடைக்காத அல்லது காலதாமதமாகக் கிடைக்கிற காலங் களில் மக்கள் அவற்றை விரைவான வேறு மார்க்கங்களில் தேட முயலுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுவார்கள். அந்த நிர்ப்பந்தமே பிறகு ஒரு நியாயமாகிவிடுவதும் உண்டு. ‘எல்லா நீதி நியாயங்களும் பொய்த்துப் போகிற போது நீதி நியாயங்களே பொய் என்று பிரகடனப் படுத்திய ஒர் அநீதி மூலம்தான் நீதி நியாயங்களைத் தேட நேரிட்டு விடும்’ என்று தீவிரமான கோபம் கொண்ட