பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 349

மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொதிப்போடு பேசிக் கொண்டார்கள். அந்த விசாரணை முடிவை எதிர்த்து மல்லிகைப் பந்தல் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் முழுவதும் கறுப்புச் சின்னமணிந்து வகுப்புக்களைப் புறக் கணித்தார்கள். பல்கலைக்கழக சின்னத்தைப் போல் கரிக் கட்டியால் சுவரில் வரைந்து அதில் வித் ட்ரூத் அண்ட் விஸ்டம் என்ற கொள்கை வாசகம் இருக்க வேண்டிய இடத் தில் வித் கரப்ஷன் அண்ட் ஃப்ராட் என்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதினான் ஒரு தீவிரவாதியான கோபக்கார மாணவன்! நீதிக்கு நமது அநுதாபங்கள்! அது இன்றைய தினம் செத்துவிட்டது என்று துணைவேந்தர் அலுவலகத்தில் பிரதான சாலையில் வெள்ளை சாக்பீஸால் பெரிதாக எழுதி வைத்தான் மற்றொரு மாணவன். பல்கலைக் கழக உட்புறச் சாலைகளும், சுவர்களும் அன்று வாசகங்கள் மயமாக மாறின. நிலைமை மறுபடியும் சரியாக ஆக நாலைந்து நாட்கள் ஆயின. இதை ஒட்டிப் பட்டமளிப்பு விழா நாள் மறுபடியும் சில வாரங்கள் தள்ளிப் போடப்பட்டன.

நீதி விசாரணை முடிவு பற்றிய பரபரப்புத் தணிந்ததும் மாணவர்கள் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நேரு விழாக் கொண்டாடினார்கள். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமையில் ஒரு விவாத அரங்கம் நடை பெற்றது. மாணவர் பேரவையின் சார்பில் மோகன்தாஸ் தொடக்க உரை நிகழ்த்தியபின் பாண்டியன் தலைமையில் ஆறு மாணவர்கள் நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது என்றும் கண்ணுக்கினியாள் தலைமையில் ஆறு மாணவிகள் அது அவர் காலத்தில் வெற்றி பெறவில்லை என்றும் கட்சி பிரித்துக் கொண்டு விவாதித்தார்கள்.

“இந்தியா தனது வறுமையையும் ஏற்றத் தாழ்வுகளை யும் ஒழிக்க விரும்பினால் சமதர்ம வழியிலேதான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது அந்த இலட்சியத்தைத் தன் மேதைத் தன்மைக்குரிய முறையில் அமைத்துக்