பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சத்திய வெள்ளம்

கொண்டு தன் சொந்த வழிகளையும் வகுத்துக் கொள்ளும், நமது பொருளாதாரத் திட்டம் மானிட நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று 1929ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை உரையிலேயே நேரு கூறியதைச் சுட்டிக்காட்டி விவாதித்தான் பாண்டியன். உடனே கண்ணுக்கினியாள் அதை எதிர்த்து விவாதித் தாள். “நேரு எதைச் சுட்டிக்காட்டினார் என்பதல்ல விவாதம். அதை அவர் காலத்தில் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி. அதை நண்பர் பாண்டியன் விளக்கவே இல்லை...” என்று அவள் பாண்டியனை மறுத்துப்பேசிக் கொண்டிருந்தபோது ஈவ் டீஸிங்'கில் ஆசையுள்ள யாரோ ஒரு குறும்புக்கார மாணவன் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தி மேடையில் மைக்கைக் குறிவைத்து வீசினான். அது டபடபவென்று வெடித்தபடி தலைமை வகித்த பேராசிரியரின் மேஜை மேல் போய் விழுந்தது. மேலும் அந்தப் பட்டாஸ் சரம் வெடிப்பதற்குள் மாணவர்களின் கை தட்டல் சிரிப்பொலி களிடையே அதை மேஜை விரிப்புத் துணியால் அமுக்கி மூடி விரைந்து அணைத்துவிட்டார் தலைமை வகித்த பேராசிரியர்.

“நாம் வார்த்தைகளால் விவாதிக்கவே இங்கு கூடியிருக்கிறோம். வெடிகளால் அல்ல” என்று கண்ணுக் கினியாள் மேலே பேச்சைத் தொடர்ந்தபோது மாணவிகள் கைதட்டி ஹியர், ஹியர்’ என்று உற்சாகக் குரலெழுப் பினார்கள். “அடிப்படையிலேயே மாற்றம் பெறுவது சமதர்மத்தில் அடங்கியுள்ள முக்கியமான கருத்து. அது உடனே முடியக்கூடியதன்று. இதற்குப் போதிய காலம் தேவை” என்று நேருவே லோதியன் பிரபுவுக்கு எழுதிய கடித வாசகம் ஒன்றைக் கண்ணுக்கினியாள் சான்றாகக் காட்டி, இப்படி எழுதியிருப்பதன் மூலம் தம் காலத்துக் குள் அந்தச் சாதனை நிறைவாக முடியாது என நேருவே கருதியிருக்கிறார். 1936-ல் இப்படி அவர் எழுதினாலும் அவர் ஆண்ட கால நிலைமையும் அதுவாகவே இருந்தது'