பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சத்திய வெள்ளம்

விடலாம் என்றும் கூறினான். அப்புறம் தான் அவள் மகிழ்ச்சியோடு அவனிடம் பேசி ஃபோனை வைத்தாள். அண்ணாச்சிக் கடைக்குப் புறப்படுவதற்கு முன் கதிரேசன் அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைவு வந்தது. அவனைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் அண்ணாச்சியின் கடைக்குப் போகலாம் என்று சொன்னார்கள் உடனிருந்த மாணவர்கள்.

பாண்டியன் முதலிய மாணவர்கள் கதிரேசனின் வீட்டுக்குச் செல்லும்போது மல்லை இராவனசாமியின் கட்சி அலுவலகம் இருந்த பாதையாகப் போக வேண்டி யிருந்தது. அந்தக் காட்சி அலுவலக வாயிலில் இராவண சாமியின் ஆட்கள் பத்துப் பதினைந்து பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களைப் பார்த்ததும் அவர்கள் முறைத்தார்கள், சிலர் சில வசை மொழிகளையும் மாணவர்கள் காது கேட்கும்படியே வேண்டுமென்று இரைந்து சொன்னார்கள். பாண்டியனோ மற்ற மாணவர்களோ அதைப் பொருட்படுத்தாமலே அந்த இடத்தைக் கடந்து போய்விட்டார்கள். கதிரேசன் நன்றாகக் குணமடைந்து வீட்டு வாசலில் தோட்டத்திலேயே உலாவிக் கொண்டிருந்தான். மாணவ நண்பர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்து பருகுவதற்குத் தேநீர் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். -

“நான் ஒடியாடித் திரியறவன். பத்து நாளைக்கு மேலே படுத்த படுக்கையா இருந்தது போரடிச்சுப் போச்சு. நாளைக்கே யூனிவர்ஸிடிக்கு வந்திடலாம் போலத் துடிப்பா இருக்கு” என்றான் கதிரேசன். அப்போது ஒரு மாணவன் குறுக்கிட்டான்:- -

“நீ வந்து நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றதுங்கிற கட்சி யிலே அண்ணனோட அணியிலே பேசியிருந்தியின்னா அன்று அண்ணன் கட்சியிலே தோற்காமல் பிழைத் திருக்கும்."