பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 355

“கேள்விப்பட்டேன்! அண்ணனுக்கு இது தோல்வியே இல்லை. எந்த எதிர்க்கட்சி ஜெயிச்சிருக்கோ அந்த எதிர்க் கட்சித் தலைவியே அவர் கட்சிங்கிற இரகசியம் உனக்குத் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லமாட்டே நீ! என்ன நான் சொல்றது சரிதானே பாண்டியன்?” என்று கதிரேசன் குறும்புத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி பாண்டி யனைப் பார்த்துச் சொன்னான். மற்ற மாணவர்கள் ஒர் உற்சாகத்தில் கை தட்டினார்கள்.

பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் கதிரேசனோடு பேசிவிட்டு அவர் அண்ணாச்சிக் கடைக்குச் செல்வ தற்காக அதே பாதை வழியாகத் திரும்பியபோது இராவண சாமியின் கட்சி அலுவலக வாசலில் நின்ற அந்தக் கூட்டத் தைக் காணவில்லை. ஆனால் இரண்டு தெருக்களைக் கடந்து அண்ணாச்சிக் கடைக்கு நேரே சாலை திரும்புகிற இடம் வந்ததும் இந்த மாணவர்களில் யாருமே எதிர் பாராத விதமாகக் கத்தி, கம்பு, சைக்கிள் செயின் அரிவாள் களோடு ஒரு கூட்டம் இவர்களை எதிர்த்துத் தாக்கு வதற்குப் பாய்ந்தது. அந்த முரட்டுக் கூட்டத்தில் சற்று முன் இராவணசாமி கட்சி அலுவலக வாசலில் இவர்கள் பார்த்த ஆட்களும் இருப்பதை அடையாளம் காண முடிந்தது. தாக்க வந்த கூட்டத்தைக் கண்டதுமே இந்த மாணவர்கள் போட்ட கூப்பாட்டில் அண்ணாச்சிக் கடை முன்பு பொதுக்கூட்டத்துக்கு எற்பாடு செய்து கொண்டி ருந்தவர்களும் அங்கே கூடியிருந்த மற்ற மாணவர்களும் அண்ணாச்சியும் ஓடி வரவே தாக்க வந்தவர்கள் நழுவி மறைந்துவிட்டார்கள். இல்லையானால் இரத்தக் கலகம் ஒன்றே அன்று அங்கே நடந்திருக்கும். அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்து எச்சரித்தார். மாலை ஐந்தே கால் மணிக்குக் கண்ணுக்கினியாளும், சில மாணவிகளும் கூட்டத்துக்கு வந்தார்கள். பாண்டியன் அவளிடம் நடந்ததைச் சொல்லவில்லை. ஆறுமணிக்குக் கூட்டம் தொடங்கியதுமே கண்ணுக்கினியாள் முதலிய பெண்கள் முதலில் சொற்பொழிவு செய்துவிட்டார்கள். அவர்கள்