பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 357

கண்டித்தபோது, ‘உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படும் பொறுப்பு உன்னைவிட இந்தத் தங்கச்சிக்குத்தான் அதிகம் என்று தன்னைச் சுட்டிக்காட்டிப் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களுடைய அன்பும் நேசமும் தங்களோடு பழகும் பிறரால் புரிந்து கொள்ளப்பட்டுச் சரியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டுவிட நேரும்போதெல்லாம் இப்படித்தான் மனம் பூரித்தாள் அவள். விடுதி விதிகள் கடுமையாக்கப்பட்டி ருந்தும்கூட அன்று முன்னிரவில் அண்ணாச்சியின் கடை முன்பாக நடந்த நேரு விழாக் கூட்டத்தில் பாண்டியன் பேசுகிற வரை இருந்து கேட்ட பின்பே அவளும் மற்ற மாணவிகளும் விடுதிக்குத் திரும்பினர்.

மறுதினம் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன் பல்கலைக் கழக மைதானத்தில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோது, “உனக்காகவாவது நான் எச்சரிக் கையாக இருக்கவேண்டும் என்று உன்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே அண்ணாச்சி சொல்லிவிட்டார். அதனால் இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கும்போதே எதிரே எச்சரிக்கையைப் பார்க்கிற பயம் வந்து விடுகிறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பாண்டியன். அவள் அருகே நின்ற தோழிகளும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

“நல்ல வேளை! அபாயம் என்று சொல்லாமல் ‘எச்சரிக்கை என்று சொன்னிர்களே?”

“எச்சரிக்கை என்று சொல்லிவிட்டதனால் அபாயம் இல்லை என்று ஆகிவிடாது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் அபாயம் என்பதனால்தான் ஆண்கள் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.”

“ஆண்கள் மட்டும் அபாயமே இல்லாத பரம சாதுக்களோ?”

“ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவு செய்ய வேண்டிய விவாதம் இது. இப்போது எனக்கு அதற்கான நேர ഥിധ്ര !"