பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சத்திய வெள்ளம்

வந்திருக்கலாம், ஆனால், இப்போது எனக்கு உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை.”

“அப்படியானால் நன்றி. அதோடு ஒரு சின்ன வேண்டுகோள்...?”

“என்ன வேண்டுகோள்?” “இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிறவரை எங்கே போவதென்றாலும் நீங்கள் தனியே போகக் கூடாது. பத்துப் பன்னிரண்டு மாணவர்களோடு சேர்ந்துதான்போக வேண்டும்.”

“ஏன் அப்படி..?” “அப்படித்தான்! எங்கு பார்த்தாலும் நோட்டீஸ்களில், சுவர்களில், எல்லாம் ஒரே சிங்கமும் சிறுத்தையுமாக இருக்கிறதே?”

“தவறு அவர்களுடையதில்லை! மனிதர்களைப்பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது.”

அவள் இதைக் கேட்டு அடக்கமுடியாமல் வாய் விட்டுச் சிரித்தாள். அப்போது அவள் முகம் மிக மிக இரசிக்கக் கூடியதாயிருந்தது.

மீண்டும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை கொடுத்தாள் அவள். பாண்டியன் அவளிடம் சொல்லிக் கொண்டு நண்பர்களோடு போய்ச் சேர்ந்தான். நண்பர்கள் மெல்ல அவனைக் கிண்டினார்கள்:

“காதல், தேர்தல் இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் அப்பனே!”

“நீ சொல்வது தவறு! இந்தக் காதலே தேர்தலை ஒட்டித்தானே பிறந்திருக்கிறது?” என்றான் மற்றொரு நண்பன். -

“இந்தப் பெண்ணுக்கு இப்போதே டிப்ளோமா இன் டிராமாவைக் கொடுத்துவிடலாம். மூன்று வருடப் படிப்பு அநாவசியம். சாதாரண விஷயங்களைக்கூட ஒரு டிரமடிக் எஃபெக்ட் கொடுத்து நடத்தி விடுகிறாள் இவள். காலை யில் அண்ணாச்சி கடையில் செய்ததும் சரி, இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/36&oldid=609680" இலிருந்து மீள்விக்கப்பட்டது