பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 சத்திய வெள்ளம்

“ஏன்? நேரு விழாப் பட்டிமன்றத்தில் தோற்றது போதாதா? மறுபடியும் தோற்க ஆசையா?”

கண்ணுக்கினியாள் சார்பாக அவளுக்குப் பரிந்து கொண்டு வந்து பேசிய எல்லாப் பெண்களும் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது முதற்பாட வேளைக்கான மணி அடித்து அவனைக் காப்பாற்றியது. எல்லோருமே அவரவர்களுடைய வகுப்புக்களுக்காக விரைந்தார்கள். மைதானத்தில் வகுப்புக்காக விரைந்து கொண்டிருந்த பாண்டியனை நடன சுந்தரம் என்ற பெயரையுடைய கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர் அவசரமாகத் தேடி வந்து எதிர் கொண்டார்.

“அண்ணனைப் பார்க்கத்தான் வந்தேன்? ஒரு ஐந்து நிமிஷம் நின்னு நான் சொல்றதைக் கேட்டப்புறம்தான் போகணும். இரண்டு வாரங்களாக ஒரு பெரிய தகராறு. வகுப்பிலே உரைநடைப் பகுதி நடத்த வருகிற போதெல்லாம் பண்புச் செழியனார் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்லி, மேடைத் தமிழ், ஏட்டுத் தமிழ் எல்லாமே அவரால்தான் உயிர் பெற்றது. அவரே தமிழுக்கு உயிர் கொடுத்தார். அவரை வீர வணக்கம் செய்தே தமிழை வளர்க்க முடியும்’ என்று வெளிப்படையாகக் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபடு கிறார். நானும் வேறு சில தேசிய மாணவர்களும் வகுப்பிலேயே குறுக்கிட்டு, வீர வணக்கத்தைக் குருட்டுத் தனமாகப் பின் பற்றி மோசம் போன காரணத்தால்தான் ஒரு தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யாரோ ஒருவர் மேடையில் பேசியது போலவே மூக்கால் பேசவும், யாரோ ஒருவர் எழுதியது போலவே பருவப் பாவை உரைநடை’ எழுதவும் பழகிச் சீரழிந்தனர். தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் ஒரிஜினாலிடி யும், இண்டுவீஜுவாலிடியும் வளராமல் வெறும் இமிடேஷன் மட்டுமே நோயாக வளர்ந்த பயங்கரமான தொத்து நோய்க் காலத்தைத்தான் நீங்கள் பொற்காலம் என்று பொய்யாகப் புனைந்து இங்கே சொல்லுகிறீர்கள்