பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 359

சார்!” என்று மறுத்தோம். உடனே பண்புச் செழியனா ருக்கு ஆதரவான சில மாணவர்கள் வகுப்பிலேயே எங்கள் மேல் பாய்ந்துவிட்டார்கள். கூப்பாடு போட்டார்கள். வகுப்பில் நடக்கும் பச்சையான இந்தக் கட்சிப் பிரசாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும்” என்றார் நடன சுந்தரம்.

மாலையில் தன்னை விடுதி அறையில் வந்து பார்த் தால் இதைப் பற்றிக் கலந்து பேசிச் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்று கூறி அந்த மாணவ நண்பருக்கு விடை யளித்தான் பாண்டியன். நடன சுந்தரமும் மாலையில் மற்ற நண்பர்களோடு வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். பகல் நேரம் முழுதும் சுறுசுறுப்பாக வகுப்புக் களில் கழிந்தது. நண்பகலில் மாணவ மாணவிகளுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் மறுநாள் மாலை எல்லா விடுதிகளுக்குமான விடுதி நாள் விழாவும் தேநீர் விருந்தும் நடைபெறும் என்றும் அதில் கலந்து கொண்டு பேச ஒரு பெரிய நடிகரும், வெளிப்புறக் காட்சிப் படப் பிடிப்புக்காக அவரோடு மல்லிகைப் பந்தலுக்கு வந்தி ருக்கும் ஒரு நடிகையும் வரப்போவதாகச் சுற்றறிக்கை கூறியது. பல்கலைக் கழகப் பாட ஆண்டின் மூன்று பகுதி களும் இப்படி விடுதிகளுக்கான விழா அல்லது லோஷல் பிரேக் அப் - ஒன்றைக் கொண்டதாக இருக்கும். மாணவர் பேரவைத் தேர்தல், வேறு பல பரபரப்பான நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்ததனால் முதற் பகுதியில் விடுதி விழா அவ்வளவு நன்றாக அமையவில்லை. எனவே இந்த இரண்டாவது பகுதியில் அதை ஏற்பாடு செய்து அந்தச் சமயத்தில் அங்கே படப்பிடிப்புக்காக வந்திருந்த இரு கலைஞர்களையும் அதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைத்திருந்தார்கள். விடுதி சம்பந்தமான குழுக் களில் மட்டும் எப்படியோ மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள மாணவர்களே அதிகமாகத் தேர்ந் தெடுக்கப் பெற்று வந்திருந்தார்கள். அதனால் இந்த விடுதி விழாவில் அவர்கள் ஏதாவது வம்பு செய்யக்கூடும் என்று பாண்டியனும் நண்பர்களும் எதிர்பார்த்தார்கள். அன்று