பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சத்திய வெள்ளம்

மாலை நடனசுந்தரமும் அரோடு வேறு சில ஒரியண்டல் பட்டப்படிப்பு மாணவர்களும் தன் அறைக்குத் தேடி வந்தபோது அவர்கள் பிரச்னை பற்றிச் சிறிது நேரம் பேசிப் பாண்டியன் வழிவகைகளைக் கூறிய பின் மறுநாள் மாலை நடைபெற இருக்கும் விடுதி நாள் விழாவைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது.

“விழாத் தேநீர் விருந்துக்கான உண்டி வகைகள் பற்றிய அட்டை (மெனு புதுமையான முறையில் அச்சிடப் பட்டிருக்குமாம்! சிறப்பு விருந்தினர்களான நடிகமணி தங்கராஜுக்கும், நடிகை ஜெயபாலாவுக்கும் விடுதிகளின் சார்பில் வரவேற்பிதழ்கள் அச்சிடப்பட்டுப் படித்துக் கொடுக்கப்படுமாம்! இதுதான் நான் கேள்விப்பட்டது” என்றான் ஒரு மாணவன்.

“இதன் அமைப்பாளர்கள் அத்தனை பேருமே சரியான பஃபூன்கள்! நாளைக்குப் போய் பார்ப்போம். இன்னும் நிறையக் கேலிக் கூத்துக்கள் இருக்கும்” என்று பாண்டியன் சொன்னபோது உடன் இருந்த மாணவர்கள் சிலர் அதை ஆமோதித்தனர். வேறு சிலர் “இதெல்லாம் உன் கற்பனை: ஒன்றுமே நடக்காது! எப்போதும் நடக்கிற சடங்கு இது. இப்போதும் அப்படி ஒரு சடங்காகவே இது நடந்து முடிந்துவிடும் அவ்வளவுதான்” என்று அவன் கூறியதை மறுத்தார்கள்.

“நாளை மாலை வரையில் பொறுத்திருங்கள்! யார் சொல்வது சரி என்பது தானே தெரிகிறது” என்று குறும்புத் தனமாக நகைத்தபடி சவால் விட்டான் பாண்டியன். அவன் கூறியது மறுநாள் மாலை பலித்தது. விடுதி நாள் விழாவின் தேநீர் விருந்தில் வருத்தப்படத் தக்க பல கேலிக் கூத்துக்கள் இருந்தன. விருந்து மேஜைகளில் உண்டிப் பட்டியல் (மெனு தமிழ் வாழ்க!’ என்ற தொடக்கத்துடன் இருந்தது. உணவு வகைகளில் ‘தமிழ் வாழ்க என்பதும் ஒன்றோ என்று அதைத் தவறாகப் புரிந்து கொண்டு எண்ணிய சில மாணவர்கள் பரிமாறத் தொடங்கிய