பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 363

போடு முடிந்து விடுவதில்லை. ஆழமான ஒரு சிந்தனையில் போய் முடிகிறது. முடியவேண்டும். தடுமாற்றங்கள்

எல்லாமே நகைச்சுவை ஆகிவிடுமானால் அப்புறம் நகைச்சுவைக்கு ஒரு மரியாதை இருக்காது” என்று பாண்டியன் தன் கருத்தை வெளியிட்ட பின்புதான் அவன் உள்ளுற எவ்வளவு மனம் வருந்திப் பேசுகிறான் என்பது சக மாணவர்களுக்குப் புரிந்தது.

அதற்குப்பின் ஒரு வாரம் வரை மாணவர்களுக்கு நடுவே இந்த விடுதி விழா நிகழ்ச்சிகள் சிரிக்கச் சிரிக்க விமர்சனம் ஆகிக் கொண்டிருந்தன. அந்த வார இறுதியில் சனிக்கிழமை பிற்பகல் அண்ணாச்சிக் கடையில் அமர்ந்து தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்தபோது,

“மழைக் காலம் ஏறக் குறைய முடிஞ்சு போச்சு. மலை களில் எல்லாம் பசுமை கொஞ்சுகிறது. அருவிகளில் தெளிவாவும் ஒரு சீராகவும் தண்ணிர் விழுகிறது. ஒடைகள் கலகலவென்று சிரிக்கின்றன. கரடியாறு நீர்த்தேக்கம் வரை ஒரு பிக்னிக் போய் வரலாமா” என்று பாண்டியனிடம் கேட்டான் பொன்னையா.

“போவதானால் நாளைக்கே போகலாம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னால் முடியாது. சைக்கிள்விடத் தெரிந்தவர்களாக நாற்பது ஐம்பது பேர் மட்டும் போவோம். அதிகக் கூட்டம் வேண்டாம். காலையில் எட்டு மணிக்குப் புறப்படுவோம். இங்கேயே நம்ம சங்கர் பவனில் சொல்லி நல்ல இட்டிலி, டி.பன் எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிடலாம். மாலையில் அஞ்சு அஞ்சரைக்குள் திரும்பிடறதாயிருந்தாதான் மாணவிகளும் வருவாங்க..” என்றான் பாண்டியன். தம் கடையில் பத்து சைக்கிள்கள் மட்டுமே இருப்பதால் அதிகப்படி சைக்கிள் களுக்கு வேறு கடைகளில் சொல்லி ஏற்பாடு செய்து தருவதாக அண்ணாச்சி கூறினார். உடனே கண்ணுக்கினி யாளுக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சைக்கிள் விடத் தெரிந்த மாணவிகள் மட்டுமே வரலாம் என்ற நிபந்தனையையும் கூறினான் பாண்டியன். சைக்கிள்