பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சத்திய வெள்ளம்

வாடகை உட்படத் தலைக்கு ஐந்து ரூபாய் செலவாகும் என்ற விவரத்தை அவன் கூறியபோது, “தலைக்கு மட்டும் அஞ்சு ரூபாயின்னா கைகால் உடம்புக்கு எவ்வளவு ஆகுமோ? நீங்க சொல்றதைக் கேட்டா பயமாயிருக்கே?” என்று கேலியில் இறங்கினாள் அவள்.

“உன்னோட கேலி பேச இப்போ எனக்கு நேரமில்லே. வர்ரதாயிருந்தால் உடனே சொல்லு.”

“அது சரி! நான்தான் தீரப்படாதேன்னு நீங்க கூப்பிடற இடத்துக்கெல்லாம் வந்தாகணும். மத்தவங்களைக் கேட்காம எப்படிச் சொல்ல முடியும்?” என்றாள் கண்ணுக்கினியாள்.

“ஏன் முடியாது? அந்த மத்தவங்களுக்கும் ஒவ் வொருத்திக்கு ஒரு தீரப்படாதவன் இருப்பான். உனக்கு வேணும்னா அது தெரியாம இருக்கும்!”

“ஏதேது? ரொம்பக் குவியாப் பேசறாப்லே இருக்கே?” “ஆமாம்! அது யாரோடப் பேசறேன் என்பதைப் பொறுத்து வருகிற குஷி,”

“அப்பிடியா?. நான் விசாரிக்கிறேன். மறுபடியும் ஃபோன் பண்ணிச் சொல்லிடறேன். வார்டனையும் கேட்டுக்கணும்.”

“கேட்டு முடிவு பண்ணினதும் மறுபடியும் என்னைக் கூப்பிட்டுச் சொல்லு. அதுவரை இங்கே ஃபோனடியிலேயே இருக்கேன்” என்று ஃபோனை வைத்துவிட்டு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமிருந்த மருந்துக்கடையில் காத்தி ருந்தான் பாண்டியன்.

இருபது நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் அவள் ஃபோன் வந்தது. தானும் வேறு சில மாணவிகளும் வருவதாகத் தெரிவித்தாள் அவள். காலை ஏழே முக்கால் மணிக்கே அண்ணாச்சிக் கடை வாசலுக்கு வந்துவிட வேண்டும் என்று நிபந்தனை போட்டான் அவன். அவள் ஒப்புக்கொண்டு ஃபோனை வைத்தாள். அவளோடு பேசிவிட்டு அவன் அண்ணாச்சிக் கடைக்குப் போவதற்