பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 சத்திய வெள்ளம்

ஹேண்ட்பார் இரண்டையும் விட்டுவிட்டு மெளத் ஆர்கனை எடுத்து வாசிக்கத் தொடங்கிய ஒரு மாண வனைச் சுட்டிக் காட்டி, “அடேடே! நம் பழநி எப்போது இவ்வளவு தைரியமாகச் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டான்?” என்று பாண்டியன் கேட்டபோது,

“பழநியின் தைரியம் அதோ அவனது பக்கத்தில் மற்றொரு சைக்கிளில் கூடவே வருகிறது பார்” என்று பழநியின் அருகே சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒரு மாணவியைச் சுட்டிக் காட்டிப் பொன்னையா கூறியவுடன் சிரிப்பொலிகள் மலைச்சாரலில் ஒருசேர ஒலித்தன. திடீரென்று கண்ணுக்கினியாளும், பாண்டியனும் சேர்ந்து கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்கள்.

“மிஸ்டர் நடனசுந்தரம்! புலவர் வகுப்புத் தேர்வில் உங்களுக்கு ‘வெர்ஸிஃபிகேஷன் (செய்யுளியற்றல்) என்று ஒரு தேர்வு உண்டு. இப்போது எங்களுக்காக நீங்கள் உடனே ஒரு செய்யுள் இயற்ற வேண்டும். கடைசி வரியை இப்போது நான் சொல்லிவிடுவேன். இதோ நமக்கு எதிரே, “கரடியாறு நீர்த்தேக்கம் ஆறு கிலோமீட்டர் என்ற கல் தெரிகிறது. அடுத்த கல்லாகிய ஐந்தாவதற்குரிய கிலோ மீட்டர் கல் வருவதற்குள், இட்லிக்கு உண்டோ இணை’ என்ற கடைசி வரியைப் பூர்த்தி செய்து யார் முதலில் வெண்பா இயற்றிச் சொல்கிறார்களோ அவர்களுக்குப் பத்து ரூபாய், பந்தயம். யாருமே இயற்ற முடியாமற் போய் விட்டால்- புலவர் வகுப்பு மாணவர்களாகிய நீங்கள் பத்துப் பேரும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு என்னிடம் தந்துவிட வேண்டும். ஒருவரோ இருவரோ இயற்றி விட்டால் நாங்கள் தருகிற பத்து ரூபாயை வாங்கி நீங்கள் பங்கிட்டுக் கொள்ளலாம்! எங்கே பார்க்கலாம்? ரெடி ஒன். டு. த்ரீ.” என்றான் பாண்டியன். அடுத்த மூன்றாவது நிமிஷமே கோதை மார்பன் என்ற புலவர் முதுநிலை வகுப்பு மாணவர், ‘. .