பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 367

“மங்காப் புகழ்படைத்த மல்லிகைப் பந்தலினிற் சங்கர் பவன்தரும் சாம்பாரும்-வெங்காயச் சட்டினியும் இங்கிருக்க எழுலகில் தேடிடினும் இட்டிலிக் குண்டோ இணை” என்று விரைந்து பாடிவிட்டார். அவர் பாடி நான்கு நிமிஷங்களுக்குப் பின்,

“வட்ட நிலாப்போல் வாகான இட்டிலியும் தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும்- இட்டமுள்ள சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில் இட்டிலிக் குண்டோ இணை” என்று நடனசுந்தரமும் மெல்ல மெல்ல வெண்பா வைப் பாடினார். அடுத்த எட்டுப் புலவர் மாணவர்களும் பாடுவதற்குள் ஐந்தாவது கிலோ மீட்டர் மைல் கல் வந்து விட்டது. அந்த எட்டுப் பேரிடமும் தலைக்கு ஒரு ரூபாய் வசூல் செய்து தானும் கண்ணுக்கினியாளும் மற்றவர் களும் சில்லறையாக இரண்டு ரூபாய் சேர்ந்துப் பத்து ரூபாயை இரண்டு ஐந்தாகப் பிரித்துக் கோதை மார்பனிட மும் நடனசுந்தரத்திடமும் கொடுத்தான் பாண்டியன். “ஜாக்கிரதை! பிக்னிக் முடிந்து திரும்புவதற்குள் வேறு ஏதாவது ஒரு பந்தயத்தில் இதை உங்களிடமிருந்து பறித்து விடுவோம். அதுவரை இந்த ரூபாய் நோட்டுக்களைப் பத்திரமாக வைத்திருக்கிற சந்தோஷம் மட்டுமாவது உங்களுக்குக் கிடைக்கட்டும்” என்றாள் கண்ணுக்கினியாள். “சரியாகச் சொல்கிறாய்! ரூபாயைச் செலவழிப்பது சந்தோஷமா? கன்னிப்பெண் கன்னியாகவே மூப்பது போல் வைத்திருப்பது சந்தோஷமா? என்பது புரியாமல் தான் பலர் இந்த நாட்டில் இன்று திகைக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

அவன் கூறிய கன்னிப் பெண் உவமைக்காக அவனைப் பொய்க் கோபத்தோடு முறைப்பது போல் பார்த்தாள் அவள்.

“பிக்னிக் என்பது கோபங்களை விலக்கிவிட வேண்டிய காரியம்.” - -