பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35

அண்ணனைத் தனியே கூப்பிட்டதும் சரி, எல்லாம் டிராமாவாகத்தான் இருக்குது.”

ஈஸ்டர்ன் ஹாஸ்டல் போகிறவரை அவர்கள் வம்பு ஓயாமல் தொடர்ந்தது. பாண்டியனும் அதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே கூடப் போனான். மாணவர்களை இரவு உணவுக்காக மெஸ்ஸுக்கு அழைக்கும் விடுதி மணி ஒலிக்கிற வரை பாண்டியனும் நண்பர்களும் அறை அறையாக ஏறி இறங்கினர். வரவேற்பு உற்சாகமாக இருந்தது. ஒர் அறையில் மாணவ நண்பர்கள் சிலர் டொயின் நூலில் ‘சாக்லேட்’களை முடிந்து ஆரம் போல ஆக்கி அவனுக்கு மாலையாகப் போட்டார்கள். வேறோர் அறையில் இவர்களுக்கு வேண்டிய குறும்புக்கார மாணவன் ஒருவன் பாண்டியனுக்குத் திருஷ்டி கழித்தான். தன்னுடைய விடுதி உணவு அறைக்குத் திரும்ப இருந்த பாண்டியனையும் அவனுடன் இருந்த மாணவர்களையும் கிழக்குவிடுதி உணவறையிலேயே தங்கள் விருந்தாளிகளாக வந்து உணவருந்துமாறு அழைத்துச் சென்றார்கள் அவர் கள். ஏதோ படையெடுத்துப் பெரிய ஊர்வலம் போவது போல் அவர்கள் கூட்டமாக உணவறைக்குச் சென்றார்கள். மெஸ்ஸில் பரிமாறிய பீன்ஸ் கறி விறகுபோல் முற்றியிருந்ததனால் கடிக்கும்போது நார் நாராக வந்தது. “இந்த ஊரிலிருந்து கீழே உள்ள மூன்று ஜில்லாக் களுக்குத் தளதள என்று அருமையான பீன்ஸ், கேபேஜ், காலிஃப்ளவர் எல்லாம் லாரி லாரியாகப் போகிறது. ஆனால் இதே ஊரில் நம்முடைய ஹாஸ்டலுக்கு மட்டும் எப்படித்தான் இந்த விறகுக்கட்டை பீன்ஸ் கிடைக்கிறதோ, தெரியவில்லை.” -

குழுவில் ஒரு மாணவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மெஸ் சூபர்வைஸர் காதில் விழும் படியே இதைச் சொன்னான். உடனே மற்றொரு மாணவன், “உனக்குத் தெரியாதா சமாசாரம்? நல்ல பீன்ஸ் கறி வேண்டுமானால் நீ சீஃப் வார்டன் வீட்டிலோ, வி.சி. வீட்டிலோ போய்ச் சாப்பிட வேண்டும். வெஜிடபிள்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/37&oldid=609704" இலிருந்து மீள்விக்கப்பட்டது