பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சத்திய வெள்ளம்

“குறும்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். அதற்கு மட்டும் விதிவிலக்கா, என்ன?”

“பிக்னரிக்கின் விதியே குறும்புதானே? அதை விலக்கி விட்டால் அப்புறம் எதற்கு பிக்னிக்’?” என்று பாண்டியன் பதிலுக்குக் கேட்டதும், “ஆம்! ஆம்! குறும்பு வாழ்க! நீடுழி வாழ்க!” என்று மாணவர்களின் ஒன்றாக இணைந்த குரல்கள் முழங்கின.

முப்பதாவது அத்தியாயம்

அன்று அவர்கள் பிக்னிக்'குக்காகப் புறப்பட்டு வந்திருந்த இடம் மல்லிகைப் பந்தலைச் சுற்றி இருந்த மலைப்பகுதிகளிலேயே மிகவும் அழகான இடம். சுற்றிலும் மலைச்சிகரங்களின் பசுமைச் செழிப்புக்கு நடுவே தற் செயலாக உதறிப் போட்ட பச்சை வெல்வெட் துணியில் நடுவே இரசம் பூசிய கண்ணாடி பதித்தது போல் கரடி யாறு நீர்த் தேக்கம் அமைந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து அரை மணிநேரப் பயணத்தில் போய்ச் சேர முடிந்த தொலைவிலேயே அந்த நீர்த்தேக்கப் பகுதி இருந்தாலும் அவர்கள் நடுநடுவே நின்றும், சிரித்தும், பேசியும், உல்லாசமாகவும், மெதுவாகவும் சென்றதால் நீர்த் தேக்கத்தை அடைய ஒரு மணி நேரம் ஆயிற்று. புறப்படும் முன்பாக எல்லாரும் வெறும் காப்பி மட்டுமே பருகி யிருந்ததால் போய்ச் சேர்ந்ததுமே பசி தீரச் சிற்றண்டியை முடித்துக் கொண்டார்கள். அப்புறம் மாணவர்களும் மாணவிகளும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து பேச்சு, விளையாட்டு, பாட்டு, இசைக்கருவிகள், சீட்டாட்டம் என்று அவரவர்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடத் தொடங்கினர். அங்கே பக்கத்தில் ஓர் அருவியில் நிறையத் தண்ணிர் விழுந்து கொண்டிருந்தது. அதன் வெண்மை பச்சை நிற மலைமகள் வெளேர் என்று முத்துமாலை சூட்டிக் கொண்டிருப்பதுபோல் பார்ப்பவர் கண்களைக் கவர்ந்தது.