பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 371

தொடங்கியபோது அவருக்கு அவன்மேல் கோபமே வந்துவிட்டது.

“நீ சும்மா இரு தம்பீ! சிரமம் என்ன பெரிய சிரமம்? என்னோட வாழ்க்கையிலே சந்தோஷமே இதுதான். மல்லிகைப் பந்தல்லே கடையின்னு ஒண்ணைத் திறந்த நாளிலே இருந்து அங்கே படிக்க வார புள்ளைங்களுக்கு உபகாரம் பண்றதுதான் எனக்குச் சந்தோஷமாயிருந் திருக்கு. பணம் இல்லாமே ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியாமத் திண்டாடியிருக்கிற எத்தினி பசங்களுக்கு என் கையிலேருந்து பணம் கட்டியிருப்பேன் தெரியுமா? அதை எல்லாம் சிரமம்னு நினைச்சா நான் செஞ்சிருக்க முடியுமா?”

அப்போது அண்ணாச்சியை எதிர்த்துப் பேச முடியா மல் அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு நின்றான் பாண்டியன். பிறருக்காகச் சிரமப்படுவதிலேயே தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொள்ளும் சிலரும், பிறரைச் சிரமப்படுத்துவதிலேயே தங்கள் வாழ்க்கையும், பிறர் வாழ்க்கையும் அழியும்படி செய்கிற சிலரும் நிறைந்த உலகில் அண்ணாச்சி முதல் வகைக்கு முதல் உதாரணமா யிருந்தார். தொண்டு செய்வதையே ஒரு தவம்போல் பழகி யிருந்த அவரால் சும்மா இருக்க முடியாதென்று அவனுக் குப் புரிந்தது. வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடம்புக்குள் இருக்கும் மலர் போன்ற இதயத்தை அவன் வியந்தான். மாணவர்களை உட்கார வைத்து அண்ணாச்சியும் அவரோடு வந்திருந்த ஜீப் டிரைவரும் உபசரித்து உணவு பரிமாறினார்கள். அது முடிந்ததும் அண்ணாச்சியையும் டிரைவரையும் உட்கார வைத்து மாணவர்கள் உணவு பரிமாறினார்கள். போட்டி போட்டுக் கொண்டு அன்பாக அண்ணாச்சியை உபசரித்தார்கள்.

சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து

விட்டு ஜீப்பில் திரும்பினார் அண்ணாச்சி. புறப்படுவதற்கு முன்னால், “ரொம்ப நேரம் தங்க வேணாம்; பொழுது சாயறப்ப அணை ஒரமாத் தண்ணி குடிக்க யானைக்