பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 373

விடும்” என்றார் பிச்சைமுத்து. மணவாளனைவிடத் தம்மை முற்போக்கானவர் என்று காட்டிக் கொள்ள அவர் முயல்வது பாண்டியனுக்குப் புரிந்தது. அதை ஒட்டி அவருக்கும் பாண்டியனுக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அவர் தர்க்க ரீதியாகப் பதில் சொன்னாலும் அதிலிருந்த அளவு மீறிய வேகம் அவனுக்குப் புரியவில்லை. கதி ரேசனும், வேறு சில மாணவர்களுமோ பிச்சைமுத்து சொல்வதுதான் சரி என்றார்கள். பாண்டியன் அதில் கருத்து வேறுபட்டுத் தயங்கினான். பிச்சைமுத்து தங்கி யிருந்த இரு நாட்களும் கதிரேசன் தனித்தனியே பல விடுதி அறைகளுக்கு அவரை நடு இரவிலும், அதிகாலை யிலும் அழைத்துச் சென்று ஒற்றையாகவும், குழுக்களாக வும் மாணவர்களைச் சந்திக்க வைத்தான். வேளாண்மைப் பட்டப் பிரிவிலும், பொறியியல் பட்டப் பிரிவிலும் நிறைய மாணவர்களைச் சந்தித்தார் அவர். அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டு ஊர் திரும்பிய தினத்திலிருந்து கதிரேசன் பாண்டியனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டான், தனக்கும் கதிரேசனுக்கும் நடுவே இடைவெளி வளர்வது பாண்டியனுக்குப் புரிந்தது. பிச்சைமுத்து வந்து போனபின் கதிரேசனும் வேறுசில மாணவர்களும் இரவு பதினோரு மணி, ஒரு மணி என்று வேளை கெட்ட வேளைகளில் தனித்தனியே இரகசியமாகச் சந்திப்பதாகவும், பேசுவதாக வும் பாண்டியன் கேள்விப்பட்டான். கதிரேசன் தலைமை யில் ஒரு குழு தங்களிடமிருந்து பிரிந்திருப்பது பாண்டிய னுக்குப் புரிந்தது. கதிரேசனும் அவன் நண்பர் களும் இப்போதெல்லாம் அண்ணாச்சிக் கடைப்பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

“ஒட்ட வெட்டிய கிராப்பும், மீசையுமா அடையாளம் தெரியாத மாற்றத்துட்ன், முதல் நாள் அந்தத் தம்பி கதிரேசன் இந்தப் பாதையா சிகரெட் பிடிச்சுக்கிட்டே நடந்து போனப்போ நானே கைதட்டிக் கூப்பிட்டேன். காது கேட்காததுபோலப் போயிடிச்சு அது” என்று அண்ணாச்சியே பாண்டியனிடம் ஒருநாள் கூறியபோது