பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 சத்திய வெள்ளம்

நிலக்கோட்டைக்குப் போயிருந்தேன்” என்றான் கதிரேசன். முகமலர்ச்சியே இல்லாமல் மணவாளனைப் பற்றி ஒரு வார்த்தைகூட விசாரிக்காமல் அவன் அசட்டையாகப் பதில் கூறியவிதம் பாண்டியனுக்கு என்னவோ போலிருந்தது. அந்தக் கடுமையைத் தவிர்க்க விரும்பி, “நான்கூட ‘சாரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று கண்ணுக் கினியாள் சிரித்துக் கொண்டே தொடங்கியதும், “நான் இப்பல்லாம் யாரையுமே பார்க்க விரும்பறதில்லை” என்று கத்தரித்தாற்போல் பதில் சொல்லிவிட்டு உடனிருந்தவர் களோடு மேலே நடந்துவிட்டான் கதிரேசன். பாண்டியனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அந்தப் பதில் முகத்தில் அறைந் தாற்போல் ஆகிவிட்டது.

“ரொம்ப மாறிவிட்டான்” என்று கண்ணுக்கினி யாளிடம் கூறினான் பாண்டியன்.

“மாற்றம் அப்படி இப்படி இல்லை. அபாயகரமான அளவு மாறியிருக்கிறார். நான் இன்னும் என்னென்னவோ கேள்விப்படுகிறேன்” என்றாள் அவள். கதிரேசன் நடந்து கொண்ட விதம் அவர்களுக்குக் கவலை அளித்தது.

“லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி பில்டிங்'கில் குமரப்பன்னு ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்காரு. அவர்தான் உள்ளூரில் கதிரேசனுக்குக் குரு” என்றாள் கண்ணுக்கினி ΙΙ ΗΠΤώΥΤ. - - “உனக்கெப்படித் தெரியும் அது?” “எங்க விமன்ஸ் ஹாஸ்டல்லே இருந்துகூட ஒரு மலையாளிப் பெண் அவங்க ஸெல் மீட்டிங்குகளுக்குப் போக வர இருக்கா. வார்டன் அம்மாள் அவளைப் பற்றி ரொம்பவும் பயப்படுகிறாள்.” -

“அந்தக் குமரப்பன் பெரிய ஜீனியஸ்! அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா அவர் இவ்வளவு தீவிரமானவர்னு இன்னிக்கு நீ சொல்லித்தான் தெரியும்."